மொராக்கோவை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்.. மண்ணோடு மண்ணாக புதைந்த மக்கள்.. மோடி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

மொராக்கோ: வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயற்கை ஆடும் கோரத்தாண்டவத்திற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகின்றன. நிலநடுக்கம், மழை வெள்ளம், போன்றவையால் உலகம் முழுவதும் பல உயிர்கள் நொடிப்பொழுதில் பலியாகின்றன.

Extremely pained by the loss of lives due to an earthquake in Morocco says Modi

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மொராக்கோவின் முக்கிய நகரமான மரகேஷிலிருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தொலைவில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கம், 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதனால் பதற்றம் அடைந்த மக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் சில கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. மொரக்கோவில் உள்ள பழைய மதீனா பகுதியும் சேதமடைந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி குறைந்தது 296 பேர் பலியாகிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பலர் காயமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மீட்பு பணிகள் இன்னும் முழு வீச்சில் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிகிறது. மொராக்கோ மக்கள் சில கட்டிடங்கள் இடிபாடுகளாக மாறியதையும், வரலாற்றுச் சிறப்புமிக்க ராகேச்சில் உள்ள பழைய நகரத்தைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சிவப்பு சுவர்களின் சில பகுதிகள் சேதமடைந்ததையும் காட்டும் வீடியோக்களை வெளியிட்டனர்.

இந்த நிலையில் மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 1980ல் எல் அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2500 பேர் உயிரிழந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+