என்னது ஒருமாத மின்கட்டணம் 18 லட்சம் கோடியா?.. கிறிஸ்துமஸ் மரம் வைத்ததற்கு இவ்வளவு செலவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வாஷிங்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஒரு வீட்டிற்கு உலகிலேயே மிகவும் அதிக அளவில் மின்சார கட்டணம் வந்து இருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 18 லட்சம் கோடி கட்ட வேண்டும் என்று மின்சார தொகை பில் அனுப்பி உள்ளது.

இதனால் அந்த குடும்பத்தின் தலைவிக்கு உடலில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அந்த கட்டண தொகையை பார்த்தவுடன் அவரது இதயம் வலித்து உள்ளது.

இந்த பிரச்சனை குறித்து அந்த பெண்ணின் மகன் அங்கு இருக்கும் பத்திரிக்கைகளில் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அந்த மின்சார கட்டண பில்லையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

மின் கட்டணம்

மின் கட்டணம்

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது. நேற்று எல்லா வீடுகளுக்கும் நவம்பர் மாத மின்சார கட்டண தொகை வந்து இருக்கிறது. அதில் 'மேரி ஹோரோமான்ஸ்கி' என்ற பெண்ணின் வீட்டிற்கு மட்டும் 18 லட்சம் கோடி மின்சார கட்டணம் வந்துள்ளது.

உடல் நலமில்லை

உடல் நலமில்லை

ஏற்கனவே அந்த பெண்ணுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் மீண்டும் பிரச்சனை வந்து விடுமோ என்று அவர் பயந்துள்ளார். மேலும் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அங்கு இருந்த கிறிஸ்துமஸ் மரத்தால் தான் இவ்வளவு மின் தொகை வந்து இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

புகார் அளித்தனர்

புகார் அளித்தனர்

இந்த பில்லை உடனடியாக போட்டோ எடுத்து அந்த பெண், கல்லூரில் படிக்கும் தன் மகனுக்கு அனுப்பி இருக்கிறார். அவர் இந்த பில்லை அப்படியே மின்சார துறைக்கு அனுப்பி புகார் அளித்துள்ளார். அதன்பின்பே பில் தவறாக பிரிண்ட் ஆனது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் மட்டுமே மின்சார கட்டணம் வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

வைரல்

வைரல்

ஆனால் தங்களை பயமுறுத்திய மின்சார துறையை ஒரு கை பார்க்க முடிவு செய்து இருக்கிறார் மேரியின் மகன். இந்த பில்லின் புகை படத்தை அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் அனுப்பி உள்ளார். அதனுடன் அந்த நிகழ்வு குறித்து காமெடியாக கலாயத்தும் எழுதியுள்ளார். தற்போது இந்த செய்தி அமெரிக்கா முழுக்க வைரல் ஆகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Family gets 18 lakh crore electric bill after Christmas celebration in America. They have complaint to the Electricity board about this. They have revised the real amount which is only 18 thousand.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற