பசுவுடன் உடலுறவு கொள்ள முயன்ற இளைஞர்.. மாடு உதைத்ததில் சம்பவ இடத்திலேயே பலி! சரியான தண்டனை தான்!
பிரேசிலியா: இந்த உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது பெண்கள் மட்டுமின்றி விலங்குகள் மீதான வன்முறையும் கூட அதிகரித்துவிட்டது. குறிப்பாக விலங்குகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இப்போது பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. வாயில்லாத பிராணியான பசுவிடம் ஒருவர் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், அவனுக்குத் தக்க தண்டனை கிடைத்துள்ளது.
பிரேசில்:
அதாவது இந்தச் சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவுக்கு அருகில் சமம்பியா என்ற கிராமத்தில் தான் இது நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பண்ணையில் இருந்து போலீாருக்கு அழைப்பு வந்துள்ளது. பண்ணையில் வேலை செய்து வந்த நபர் பசுக்கள் உள்ள இடத்தில் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவர்களும், போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்ற முயன்ற போதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பண்ணையில் வேலை செய்யும் மற்றொரு நபரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். தினசரி காலையில் பாலை கறந்து முதலில் பண்ணை உரிமையாளர்களுக்கு இவர்கள் தருவார்களாம். ஆனால், உயிரிழந்த நபர் அதைச் செய்யவில்லை. என்னாச்சு என்று பார்க்கச் சென்ற போது தான் அவரது உடலைப் பார்த்துள்ளார். அவரை எழுப்ப முயன்ற போதுதான் அவர் ஆணுறை அணிந்து இருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்தே அவர் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
பண்ணை தொழிலாளி:
அந்த நபர் மேலும் கூறுகையில், "அவர் எப்போதும் என்னுடன் தான் மது அருந்துவார். அன்றிரவும் அதேபோலத் தான் இருவரும் மது அருந்தினோம். காலையில் எப்போதும் நாங்கள் முதலில் பாலை கறந்த ஓனரிடம் கொடுப்போம். அதன் பிறகே மீண்டும் வந்த மற்ற மாடுகளில் இருந்து பாலை கறப்போம். ஆனால், அவர் காலை ஓனருக்கு எடுத்துச் சென்று அளிக்கவில்லை. இதன் காரணமாகவே என்ன நடந்தது என்பதை பார்க்க நான் வந்தேன்" என்றார்.
என்ன நடந்தது:
போலீசார் விசாரணையில், அந்த தொழிலாளி வேலை செய்து வந்த பண்ணையில் இருந்த மாட்டுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார். அப்போது அந்த பசு உதைத்ததில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார். மாடு உதைத்ததில் மாரடைப்பு ஏற்பட்டு, 45 வயது மதிக்கத்தக்க அந்த நபர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடர்கின்றனர். பசுவிடம் அத்துமீற முயன்ற அந்த நபருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
உளவியல் சிக்கல்
அதேநேரம் விலங்குகளிடம் இதுபோல மனிதர்கள் அத்துமீற முயல்வது இது முதல்முறை இல்லை. நமது நாட்டிலேயே இதுபோல நாய், ஆடு உள்ளிட்ட விலங்குகளிடம் சிலர் அத்துமீற முயன்றதாக நாம் செய்திகளில் பார்த்து இருப்போம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு மன ரீதியான பாதிப்பு. இதற்கு உரியச் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications