சப்பாத்தியை ரவுண்டாக சுட்டுத்தராத 13 வயது சிறுமி அடித்து கொலை.. தந்தை, சகோதரன் கைது
இஸ்லாமாபாத்: சப்பாத்தியை ரவுண்டாக சுடவில்லை என்பதற்காக 13 வயது சிறுமியை, தந்தையும், சகோதரனும் மாறி மாறி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின், அஜீம் பார்க் பகுதியை சேர்ந்தவர், 13 வயது சிறுமி அனீகா. வீட்டு சமையல் வேலைகளை செய்யும், பணியை அவரது குடும்பத்தார் சிறுமியிடம் கொடுத்திருந்தனர். சம்பவத்தன்று, சிறுமி சுட்ட சப்பாத்தி ஷேப்பாக இல்லாமல், காணப்பட்டுள்ளது.

ஒரு சப்பாத்தியை ரவுண்டாக சுட்டு தரமாட்டீயா... என கூறி, சிறுமியின் தந்தை அடித்து உதைத்துள்ளார். எப்போதுமே இப்படிதான் தப்பாக சப்பாத்தி சுடுகிறாள்.. என்று சகோதரனும் குற்றம்சாட்டி, அடித்து உதைத்துள்ளான்.
இதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதையடுத்து, தங்களது தோட்டத்தில் சிறுமியின் உடலை புதைத்துள்ளனர் அந்த குடும்பத்தார். தகவல் அறிந்த போலீசார், கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications