சிக்கன் டிக்கா மசாலா பிடிக்குமா? உங்களுக்கு “ஷாக்” நியூஸ்.. காலமானார் அலி அஹ்மத் அஸ்லம்
எடின்பர்க்: உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் உணவான சிக்கன் டிக்கா மசாலாவை கண்டிபிடித்த பிரபல சமையல் கலைஞர் அலி அஹ்மத் அஸ்லம் தன்னுடைய 77 வயதில் காலமாகி இருப்பது உணவு விரும்பிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்பை விட கடந்த சில ஆண்டுகளாக சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளை உண்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. சிக்கன், மட்டன், பீஃப், கடல்வாழ் உணவுகள் என அனைத்தையும் அனைத்து தரப்பினும் அதிகளவில் விரும்பு உண்கிறார்கள்.
இப்படி அசைவ உணவுகளை சாப்பிடும் உணவு விரும்பிகள் சிக்கன் டிக்கா மசாலை அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. தொடக்கத்தில் பெரிய உணவகங்களில் மட்டுமே கிடைத்த இந்த சிக்கன் டிக்கா மசாலா தற்போது தமிழ்நாட்டின் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கூட கிடைக்கிறது.

அல் அஹ்மத் அஸ்லம்
இப்படி அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிக்கன் டிக்கா மசாலா எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? அது எந்த நாட்டு உணவு என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த சூழலில்தான், அதை அறிந்துகொள்வதற்கு முன்பே, சிக்கன் டிக்கா மசாலாவை கண்டுபிடித்த அலி அஹ்மத் அஸ்லமின் மறைவு செய்தி கிடைத்து இருக்கிறது.

77 வயதில் மரணம்
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவை சேர்ந்த அலி அஹ்மத் அஸ்லம் சிஷ் மஹால் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை அவர் காலமானதாக உணவகம் தெரிவித்துள்ளது. அலி அஹ்மதுவின் மறைவு வேதனையளிப்பதாகவும், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் உணவகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மதிய உணவு சாப்பிட்டு மரணம்
உணவகத்தில் எப்போதும் மதிய உணவு உட்கொள்ளும் அலி அஹ்மத், கடந்த திங்கட்கிழமையும் உணவக சமையல் கலைஞர்கள் செய்த உணவை சாப்பிட்டதாகவும், அதன் பின்னர் அவர் காலமானதாகவும் அவரது உறவினர் அண்ட்லீப் அஹ்மத் கூறி உள்ளார். அப்போது அவர் சிக்கன் டிக்கா மசாலா சாப்பிட்டாரா என்பது தெரிவில்லை எனவும் அண்ட்லீப் தெரிவித்திருக்கிறார்.

உணவுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர்
உணவகத்துக்காகவும், உணவுகளுக்காகவுமே தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர் அலி அஹ்மத் அஸ்லம் என அண்ட்லீப் பாராட்டி இருக்கிறார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என உறவினர்கள் தெரிவித்து உள்ளனர்.

சிக்கன் டிக்கா மசாலா உருவான முறை?
கடந்த 2009 ஆம் ஆண்டு ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அலி அஹ்மத், "நான் சமைத்து கொடுத்த சிக்கன் டிக்கா உலர்ந்த நிலையில் இருப்பதாக ஒரு வாடிக்கையாளர் என்னிடம் புகார் தெரிவித்தார். எனவே தனக்கு சாஸ் வேண்டும் என்று அவர் கேட்டார். அப்போதுதான் எனக்கு சிக்கன் டிக்கா மசாலாவுக்கான யோசனை கிடைத்தது." என்றார்.

பாகிஸ்தான் பூர்வீகம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட அஹ்மத் அலி, ஸ்லாட்லாந்திற்கு கடந்த 1964 ஆம் ஆண்டு தன்னுடைய இளம் வயதில் குடும்பத்தோடு வந்திருக்கிறார். இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். தன்னுடைய சிக்கன் டிக்கா மசாலா உணவு ரெசிப்பியை கிளாஸ்கோ நகருக்கு அன்பளிப்பாக தருகிறேன் என்று கூறியவர் அலி அஹ்மத் அஸ்லம்.

உலக புகழ்பெற்ற சமையல் கலைஞர்
இதை ஐரோப்பிய உணவாக கருத வேண்டும் என்று வலியுறுத்திவர். பர்மா ஹாம், கிரீக் ஃபேடா சீஸ், சாம்பெயின் ஆகியவற்றோடு தன்னுடைய சிக்கன் டிக்கா மசாலாவையும் சேர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உணவாக ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். உலகெங்கிலும் இவரது சமையலுக்கு பெரும் வரவேற்பு உள்ள நிலையில் அவரது மறைவு உணவு விரும்பிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications