அன்னையர் தின பரிசாக ‘பிரசவ வலியை’ அனுபவித்த கணவர்... ரசித்துப் பார்த்துச் சிரித்த மனைவி!
லண்டன்: பெற்றால்தான் தெரியும் பிரசவ வலி என்பார்கள். ஆண்களுக்கு அந்தப் "பாக்கியமே" கிடையாது. அதிகபட்சம் மனைவி பிரசவிக்கும்போது அருகில் இருந்து வலியை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது ஆண்களால். ஆனால் மேலைநாடுகளில் தற்போது ஆண்களுக்கும் பிரசவ வலியை ஏற்படுத்தும் கருவிகள் வந்து விட்டன. எனவே மனைவி படும் வேதனையை ஆண்களும் இனி பட முடியும்.
அந்த வகையில் இந்தப் பெண் தனது கணவருக்கு பிரசவ வலியை உணர வைத்து அதை அதீத சந்தோஷத்துடன் பார்த்துப் பார்த்துப் பூரித்த காட்சி யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

அழகான குடும்பம்...
அந்தப் பெண்ணின் பெயர் கிம் டீன். இவரது கணவர் பெயர் பென் ஹோல்டர்னஸ். 40 வயதான பென்னுக்கும், கிம்முக்கும் இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர்.

அன்னையர் தின பரிசு...
இந்த நிலையில் கணவரிடம், உங்களுக்கு பிரசவ வேதனையை அனுபவிக்க ஆசையாக உள்ளதா என்று கேட்டார் கிம். அதற்கு பென்னும் சம்மதித்தார். அன்னையர் தினப் பரிசாக இந்த வலியைத் தாங்க அவர் முடிவு செய்தார் - மகிழ்ச்சியுடன்.

பிரசவ வலி...
இதையடுத்து செயற்கையாக பிரசவ வலியை உடலில் ஏற்படுத்தும் ஸ்டிமுலேட்டரை தனது கணவரின் உடலில் பொருத்தினார் கிம். பின்னர் அவரும், குழந்தைகளும் சேர்ந்து பென் பட்ட பிரசவ வலியை பார்த்து ரசித்தனர்.

படிப்படியாக...
படிப்படியாக சில நிமிடங்கள்தான் இந்த ஸ்டிமுலேஷன் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்குள்ளாகவே பென் பிரசவ வலியை முழுமையாக உயர்ந்து மீண்டார்.

வைரல்...
இந்த காட்சியை வீடியோவில் படமாக்கிய கிம் இணையதளத்திலும், யூடிபிலும் போட்டுள்ளார். இது 2013ம் ஆண்டு வெளியானது. இப்போது பரபரப்பான வைரலாகி விட்டது.
உருண்டு புரண்டு கதறி...
இந்த வீடியோவில் ஸ்டிமுலேட்டர் பொருத்துவதற்கு முன்பு ஜாலியாக காணப்படுகிறார் பென். ஆனால் அவருடைய வயிற்றில் வயர்களைப் பொருத்தி ஸ்டிமுலேட்டரை ஆன் செய்ததும் நிஜமான தாய் போலவே உருண்டு புரண்டு கதறுகிறார்.
நம்ம ஊருக்கும் இந்த மெஷினைக் கொண்டு மனைவியை மதிக்காத கணவர்களுக்குப் பொருத்தி வேடிக்கை பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications