ஹெலிகாப்டரை வைத்து மகன் பல்லை 'கழற்றிய' தந்தை! வைரலாகும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஆடிக் கொண்டிருந்த சிறுவனின் பல்லை, பல் டாக்டரிடம் போகாமல், ஹெலிகாப்டர் உதவியோடு பெயர்த்து எடுத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஒரு தந்தை.

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் பைலட்டாக உள்ள ரிக் ரஹிமின் மகன் பல் ஆட்டத்தால் அவதிப்பட்டு வந்தான். நாம்தான் ஹெலிகாப்டர் பைலட் ஆயிற்றே, ஹெலிகாப்டரை கொண்டே அவனது ஆடும் பல்லை அகற்றலாம் என்ற முடிவுக்கு வந்தார் ரஹிம்.

ஒரு நீளமான கயிற்றின் ஒருமுனையில் சிறுவனின் பல்லை கட்டிய ரஹிம், மறுமுனையை ஹெலிகாப்டரில் கட்டினார். இதன்பிறகு ஹெலிகாப்டரை கிளப்பி மெதுவாக பின்னோக்கி செலுத்த தொடங்கினார் ரஹிம். அப்போது சிறுவனின் பல் பெயர்ந்து கயிற்றில் தொங்கியபடி வந்தது.

இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார் ரஹிம். அது சமூக தளங்களில் வைரலாகியுள்ளது. 13 வருடகாலமாக ஹெலிகாப்டர் ஓட்டும் அனுபவம் கொண்ட தனக்கு, வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் அதை இவ்வாறு செய்து முடித்ததாகவும் கூறியுள்ளார்.

நமது சிறு வயதில் கிடைத்த அனுபவத்தைவிட நமது பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை தர வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் கூறியுள்ளார். இதுபோன்ற வித்தியாசமான முறையில் பற்களை கழற்றுவது உலகமெங்கும் ஆங்காங்கு நடக்கத்தான் செய்கிறது.

சிலர் குட்டி ட்ரோன் விமானங்கள் மூலமும், நாய்கள் மூலமும் பல்லை கழற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[வில்லை எடு.. அம்பை தொடு.. பல்லை பிடுங்கு... சிறுமியின் அட்டகாச வீடியோ!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+