பொசுக்கு, பொசுக்கென பூமிக்கு வந்து போகும் ஏலியன்கள்! ஆவணம் வெளியிட்ட எப்.பி.ஐ
வாஷிங்டன்: வேற்று கிரகவாசிகள் என்று அழைக்கப்படும் ஏலியன்களின் பரிணாம வடிவங்கள் பூமியில் இறங்கியதாக அமெரிக்க உளவுத்துறை தனது இணையதளத்தில் ஆவணங்களை வெளியிட்டு உள்ளது.
அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ தற்போது ஏலியன்கள் குறித்து வெளியிட்ட சில ஆவணங்கள் உலக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் ஆவணங்களின் படி பூமிக்கு எண்ணற்ற வேற்று கிரக உயிரினங்கள் வருகின்றன. இதில் சில வகை பரிணாம வளர்ச்சி பெற்று, முந்தைய ஏலியன் படங்களில் இருந்து மாறுபட்டவையாக உள்ளன. நவீன விமானங்கள் மூலமும் வந்து உள்ளன என்று கூறி ஆச்சரியம் ஏற்படுத்துகிறது அந்த அறிக்கை.

மனிதர்களை போன்ற ஏலியன்
அறிக்கையிலுள்ள சில சுவாரசிய விவரங்களை பாருங்கள்: ஏலியன்கள் வருகை தரும் பறக்கும் தட்டுக்கள் குழுவாகவே வந்திறங்குகின்றன. அவர்களின் நோக்கம் யாருக்கும் தொந்தரவு தருவதாக இல்லை. தங்களது பறக்கும் தட்டை (விமானத்தை) எங்கு தரையிறக்க வேண்டும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துதான் முடிவெடுக்கின்றனர். ஏலியன்கள் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.

பறக்கும் தட்டுகள்
அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. அவர்கள் தங்கள் விருப்பபடி உள் நுழைவதற்கு மற்றும் சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர். அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.

வெப்பம் தாங்கும்
பறக்கும் தட்டில் வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் உள்ளது. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது. அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை கொண்டுள்ளது. இவ்வாறு விரிவடைகிறது அறிக்கை.

பல ஆண்டு வழக்கம்
வேற்றுகிரகவாசிகள் கடந்த பல நூற்றாண்டுகளாக பூமிக்கு வந்து செல்வது வாடிக்கை என்றபோதிலும், கடந்த 50, 60 ஆண்டுகளில் வருகை தந்ததைதான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம், தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வசதிதான் என்கிறது அந்த அறிக்கை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications