For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கியூபா மக்களுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்கிய மனிதாபிமானி பிடல் காஸ்ட்ரோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஹவானா: பிடல் காஸ்ட்ரோ வயது மூப்பு காரணமாக, தனது 90வது வயதில், கியூபாவின் தலைநகரான ஹவானாவில் இன்று காலமானார்.

இவர் தொடர்ந்து 49 ஆண்டுகளாக கியூபாவின் அதிபராக பதவி வகித்தார். பிரிட்டன் ராணி எலிசபெத் மற்றும் தாய்லாந்து அரசர் ப்ஹுமிபோல் ஆகியோரை தொடர்ந்து உலகில் நீண்ட நாட்கள் பதவி வகித்த மூன்றாவது அதிபர் என்ற பெறுமையை பெற்றவர் பிடல் காஸ்ட்ரோ.

Fidel Castro offered free health, education and equal opportunity

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அடித்து நொறுக்கி, நாட்டுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த காஸ்ட்ரோ தனது பதவிக் காலத்தில், உண்மையான கம்யூனிஸ்டாக இருந்தார்.

ஆம்.. தனது நாட்டு மக்களுக்கு கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக்கினார். காந்தி பிறந்துள்ள தேசத்தில் கூட, கல்வி வியாபாரமாகியுள்ள சூழலில், காஸ்ட்ரோ அந்த நாட்டு மக்களின் கல்வி கண்ணை திறந்தவர்.

இத்தனைக்கும், அமெரிக்கா தனது கொடூர கரங்களால் பொருளாதார நெருக்கடியை கொடுத்தபோதும் கூட மக்களின் நலனுக்காக இலவச கல்வியையும், மருத்துவத்தையும் கொடுத்த மனிதாபிமானிதான் பிடல் காஸ்ட்ரோ.

English summary
Although responsible for indefensible human rights and free speech abuses, Castro created a society of unparalleled access to free health, education and equal opportunity despite an economically throttling USA siege.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X