ரஷ்யாவில் தரையில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி பலி
மாஸ்கோ: ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிர் இழந்தார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புஷ்கினோ மாவட்டத்தில் இருக்கும் முரானோவோ கிராமம் அருகில் போர் விமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானி பலியானார்.

விமானம் குடியிருப்பு பகுதியில் விழாமல் தடுத்த விமானியின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் சுகோய் எஸ்யூ-27 ரகத்தை சேர்ந்தது. விமானம் குடியிருப்பு பகுதியில் விழாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியதால் விமானியால் தனது இருக்கையை எஜெக்ட் செய்து தப்பிக்க முடியவலில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலியான விமானி மேஜர் செர்கி எரிமென்கோ(34) என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
செர்கி ரஷ்ய நைட்ஸ் விமான சாகச அணியின் ஸ்குவாட்ரன் லீடராக இருந்தார். அவர் எம்.ஐ.ஜி.-29, எஸ்யூ-27 உள்ளிட்ட பல ரக விமானங்களை ஓட்டிய அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications