காரை சர்வீஸ் செய்ய இவ்வளவு லட்சமா?.. கார் ஓனர் எடுத்த எதிர்பார்க்காத முடிவு.. அட டெஸ்லாவா இப்படி!
பின்லாந்து : பிரபல நிறுவனத்தின் காரை சர்வீஸ் செய்ய 20 லட்சம் ரூபாய் கேட்டதால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த காரை வெடிவைத்து தகர்த்திய சம்பவம் பின்லாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது
பின்லாந்து நாட்டில் 2013ல் டெஸ்லா நிறுவனத்தின் காரை வாங்கிய உரிமையாளர் 1500 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டிய நிலையில் அதில் பழுது ஏற்பட்டதால் வாரண்டி கேட்டு நிறுவனத்தை அணுகியுள்ளார்.
ஆனால் காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியாது என்றும், பேட்டரி உள்பட சில சாதனங்களை மாற்றுவதற்கு டெஸ்லா நிறுவனத்தின் சரவீஸ் மையம் சுமார் 17 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

பனிப்பிரதேசம் சூழ்ந்த பின்லாந்து
தெற்கு பின்லாந்தின் கைமன்லாக்ஸோ அடுத்த ஜாலா கிராமம் குறைவான வீடுகள், மரங்கள், மக்கள் தொகை பனிப்பிரதேசம் சூழ்ந்த இடமாகும். இப்பகுதியில் வசிக்கும் டூமஸ் கைட்டனன் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் பேட்ட கார் ஒன்றை வாங்கி உள்ளார். பொதுவாகவே ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் எலக்ட்ரானிக் வாகனத்துறையில் முன்னணியில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். எனவே டெஸ்லா நிறுவனத்தின் பெயர் மீது நம்பிக்கை வைத்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கியுள்ளார் அந்த நாட்டு பிரஜை.

காரை ரிப்பேர் செய்ய ரூ.17 லட்சம்
மிகச்சிறிய கிராமத்தில் வசிப்பதால் கார் அதிக அளவு தூரம் செல்ல வாய்ப்பில்லை 2013 முதல் தற்போது வரை அந்த கார் அதிகபட்சம் 1500 கிலோ மீட்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது காரில் பழுது ஏற்பட அதை சர்வீஸ் நிறுவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஏறக்குறைய ஒரு மாதம் காரை பரிசோதித்த மெக்கானிக்குகள் இந்த காரின் பழுதை நீக்க முடியாது. பேட்டரி உள்ளிட்ட பொருடகளை மாற்றவேண்டும். அதை மாற்றுவதற்கு சுமார் 20 ஆயிரம் யூரோக்கள் செலவாகும் எனக் கூறியுள்ளனர். 20 ஆயிரம் யூரோக்கள் என்பது எவ்வளவு தெரியுமா இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய் ஆகும். ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய கார் 1500 கிலோ மீட்டர் பயணத்தை கூட தாண்டாத நிலையில் அதை சர்வீஸ் செய்ய இவ்வளவு பணமா என்று உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

கார் வெடிவைத்து தகர்த்த முடிவு
மீண்டும் 20 லட்சம் ரூபாய் கொடுத்து சர்வீஸ் செய்தால் அடுத்த 1500 கிலோ மீட்டரில் பிரச்சனை வருமோ என்று சந்தேகம் அடைந்தார். அதாவது 1 கிலோ மீட்டருக்கு சர்வீஸ் கட்டணம் சுமார் ஆயிரத்து 100 ரூபாய் ஆகும். இவ்வளவு செலவு செய்து காரை சர்வீஸ் செய்ய வேண்டுமா என யோசித்த உரிமையாளர் அதை வெடி வைத்து தகர்த்த திட்டமிட்டார். பின்னர் நண்பர்களை அழைத்து அதற்கான பணிகளை மேற்கொண்டார். 30 கிலோ டைனமைட் வெடிபொருள் வாங்கி வரப்பட்டது. பின்னர் காரை சுற்றிலும் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் இறுக்கமாக கட்டப்பட்டது. பின்னர் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் உருவபொம்மை கார் ஓட்டுநர் சீட்டில் அமரவைக்கப்பட்டது.

1 கோடி ரூபாய் கார் தூள் தூளானது
ஒரு மலையிலோ கிணற்றிலோ பாறைகளை தகர்க்க என்னென்ன முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அத்தனை விதிகளும் பின்பற்றப்பட்டது. இதை வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவில் காரின் உரிமையாளர் வேதனையுடன் பேட்டியும் தருகிறார். பின்னர் பனிப்பிரதேசம் அமைந்துள்ள இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடிமருந்து மூலம் தகர்க்கப்பட்டது. கார் வெடித்தவுடன் பாறைகளும் பனிகளும், காரின் உதிரிபாகங்களும் வானாளவிய உயரத்திற்கு சென்று கீழே விழுந்தன. இந்த வீடியோ முழுவதும் தன்வார்வலர்களால் படம்பிடிக்கப்பட்டு பொம்மிஜட்கட் என்ற யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்டது. வீடியோ வெளியான ஒரு சில மணிநேரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து விட்டனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications