விபத்தில் இருந்து காப்பாற்றிய 9 வயது சிறுமி பலாத்காரம்.. 21 ஆண்டுக்குப் பிறகு புகார்!
எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் தீ விபத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக, 21 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசில் புகார் அளித்துள்ளார் 30 வயது பெண் ஒருவர்.
ஸ்காட்லாந்தின் வட லனார்க்ஷைர் பகுதியைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஒருவர் சமீபத்தில் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கு ஒன்பது வயதில் நடந்த கொடுமை குறித்து அவர் விவரித்துள்ளார்.

அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது 9 வயதில் அவரது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ஜான் மெக்ஜின் என்ற தீயணைப்பு வீரர் என்னை காப்பாற்றினார். ஆனால், காப்பாற்றிய சிறிது நேரத்தில் என்னை பலாத்காரம் செய்தார். பின் அதைப்பற்றி யாரிடமாவது தெரிவித்தால், எனது தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சம்பவத்தால் மிரண்டு போன அச்சிறுமியிடம் விளையாடுவது போலவும், மற்றவர்கள் முன்பு பாவனை செய்துள்ளார் ஜான் மெக்ஜின்.
கடந்த 1994-ம் ஆண்டு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தால், தனது வாழ்க்கையே பாதிக்கப் பட்டிருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து ஜான் மெக்ஜின்(56) மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார் ஜான். ‘இப்படியொரு சம்பவம் நிகழவேயில்லை எனவும், அந்தப்பெண் பொய் சொல்வதாகவும் கூறியுள்ள ஜான், தனது பென்ஷன் பணத்தை அபகரிக்கவே அந்தப்பெண் இவ்வாறு நாடகம் ஆடுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கிளாஸ்கோ உயர் நீதிமன்றத்தில் நேற்று போலீசார் ஜானை ஆஜர்படுத்தினர். விசாரணையின் முடிவில் இம்மாத இறுதிக்குள் இவருக்கான தண்டனை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications