23 ஆண்டுகளில் முதல் விபத்து.. மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.. 200 பேர் படுகாயம்
கோலாலம்பூர்: மலேசிய மெட்ரோ அமைப்பில் 23 ஆண்டுகளில் முதல்முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் முறை அறியப்படுகிறது. உட்சபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மெட்ரோ ரயில்கள் கட்டப்படுவதால், இதனால் ஏற்படும் விபத்துகள் மிகக் குறைவு.
இருப்பினும், மலேசியா நாட்டில் இரண்டு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ விபத்து
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது பெட்ரோனஸ் இரட்டை கோபுர மெட்ரோ சுரங்கப் பாதை. நேற்று இரவு இந்த ரயில் பாதையில் 213 பயணிகளுடன் மெட்ரோ ரயில் ஒன்று வழக்கம்போல சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்புறத்தில் காலியாக ஒரு மெட்ரோ ரயில் வந்துகொண்டிருந்தது.

200 பேர் படுகாயம்
கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு ரயில்களும் மோதி விபத்திற்குள்ளானது இந்த விபத்தில் மெட்ரோ ரயிலில் பயணித்த 47 பேர் படுகாயமடைந்தனர். மேலும், 166 பேர் லேசான காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏன்ன காரணம்
ரயில் கட்டுப்பாட்டு மையம் அளித்த தகவலில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் இருப்பினும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மலேசிய போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கோரத் தாக்கம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.
|
23 ஆண்டுகளில் முதல் விபத்து
23 ஆண்டுக்கால மலேசியா மெட்ரோ அமைப்பில் இதுதான் முதல் விபத்து என வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் வீகா சியோக், இந்த விபத்து குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications