2017- ம் ஆண்டின் முதல் குழந்தை எங்கு பிறந்தது தெரியுமா?

2017-ம் ஆண்டின் முதல் குழந்தை சரியாக 00.01 மணிக்கு பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: 2017-ம் ஆண்டின் முதல் குழந்தை சரியாக 00.01 மணிக்கு பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது.

பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகளோடு 2017 ஆம் ஆண்டு நேற்று பிறந்தது. உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அந்த வகையில் நியூசிலாந்து முதன் முதல்முதலில் புத்தாண்டை வரவேற்றது.

First baby born in Britain in 2017

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வானவேடிக்கையுடன் மக்கள் ஆனந்தமாக புத்தாண்டை வரவேற்றனர். இந்தியாவிலும் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் புதிய ஆண்டை மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்று கொண்டாடினர்.

அந்த வகையில் மேலும் சுவாரசியமாக இந்த ஆண்டின் முதல் குழந்தை பிரிட்டன் நாட்டில் பிறந்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த பாரதி தேவி-அஷ்வானி குமார். இந்த தம்பதியருக்கு 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுதான் 2017 ஆம் ஆண்டின் முதல் குழந்தையாம். 2.72 கிலோ எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு பெற்றோர் எல்லினா குமாரி என பெயர் வைத்துள்ளனர்.

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரண்டாவது குழந்தை பெண்ணாகப் பிறந்ததுள்ளது. அதுவும் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்ததுள்ளதால் பாரதி-அஷ்வானி தம்பதியர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+