கார்டினல் பதவி பெறும் முதல் தலித்... 2 இந்திய பேராயர்களை தேர்வு செய்த போப் பிரான்சிஸ்
வாடிகன்: போப் பிரான்சிஸால் கார்டினலாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ள 21 பேராயர்களில் 2 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
வாடிகன் தேவாலயத்தில் போன் பிரான்சிஸ் தலைமையில் நேற்று ரெஜினா செலி பிரார்த்தனை நடைபெற்று உள்ளது.
அப்போது புதிய கார்டினல்களை தேர்வு செய்யும் நிகழ்வை ஆகஸ்டு 27 ஆம் தேதி நடத்தலாம் என போப் பிரான்சிஸ் தெரிவித்து இருக்கிறார்.

புதிய கார்டினல்கள்
புதிதாக தேர்வு செய்யப்பட இருக்கும் கார்டினல்களில் 8 பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள். 6 பேர் ஆசியாவையும், 2 பேர் ஆப்பிரிக்காவையும், ஒருவர் வட அமெரிக்காவையும், 4 பேர் மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். தற்போது 208 கார்டினல்கள் உள்ளனர். அவர்களில் 117 பேர் தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டவர்களாகவும், 91 பேர் தேர்வு செய்யும் அதிகாரம் அற்றவர்களாகவும் உள்ளனர்.

2 இந்தியர்கள்
புதிய கார்டினல்கள் நியமனம் செய்யப்பட்டால் மொத்த எண்ணிக்கை 229 ஆகவும், அவர்களில் 131 பேர் தேர்வாளர்களாகவும் இருப்பார்கள். புதிதாக தேர்வு செய்யப்படப்போகும் ஆசியாவை சேர்ந்த 6 பேரில் 2 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஒருவர்
கோவா பேராயர் பிலிப் நெரி ஆண்டோனியோ செபாஸ்டினோ டி ரொசாரியா பெராவ். மற்றொருவர் ஐதராபாத் பேராயர் அந்தோனி பூலா.

அந்தோனி பூலா
ஐதராபாத் பேராயர் அந்தோனி பூலா 1961 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கர்ணூலில் உள்ள சிந்துகுர் என்ற கிராமத்தில் பிறந்தவர். கர்ணூலில் உள்ள மதப்பள்ளியில் படிப்பை தொடங்கிய அந்தோனி, பெங்களுருவில் இருக்கும் புனித பீட்டர் பாண்டிபிகல் மதப் பள்ளியில் மேல் படிப்பை நிறைவு செய்தார். ஆந்திராவின் பட்டியல்/பழங்குடியின ஆணையரகத்தில் பணியாற்றி இருக்கிறார்.

முதல் தலித் கார்டினல்
அந்தோனி 1992 ஆம் ஆண்டு பாதிரியாராக நியமிக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு கர்ணூல் பேராயராக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஐதராபாத் தலைமை பேராயராக அந்தோனி பூலா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவிலிருந்து கார்டினல் அந்தஸ்து பெறும் முதல் தலித் என்ற பெருமையை பெறுகிறார் அந்தோனி பூலா. தலித்துகளின் துயரங்களையும் தான் இளம் வயதில் பட்ட கஷ்டங்களையும் பேசி வரும் அந்தோனி, தலித் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் அந்தோனி பூலா.

ரொசாரியா பெராவ்
பேராயர் ரொசாரியா பெராவை பொறுத்தவரை கோவா தலைநகர் பனாஜி அருகே அமைந்துள்ள அல்டோனா கிராமத்தில் பிறந்தவர். தனது மத கல்வியை சாலிகோவில் உள்ள அவர் லெடி மத பள்ளியில் பயின்று இருக்கிறார். அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாபல் மத பள்ளியில் பயின்றதாக பனாஜியில் உள்ள பேராயர் மாளிகையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

பல மொழிகளை அறிந்தவர்
தத்துவம் மற்றும் இறையியல் படித்துள்ள பெராவ், ஆங்கிலம்,கொங்கானி, போர்ச்சுகீஸ், இத்தாலியன், பிரென்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளை சரளமாக பேசுபவர் பெராவ். கடந்த 1979 ஆம் ஆண்டு கோவா மற்றும் டாமனின் பாதிரியாராகவும், 2003 ஆம் ஆண்டு கோவா மற்றும் டாமனின் தலைமை பேராயராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications