குட்டி இளவரசர் ஜார்ஜுடன் விளையாட தங்கச்சி பாப்பா பிறந்திருக்கு!
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் சனிக்கிழமை காலை அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமான கேட் 2013ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி குட்டி இளவரசர் ஜார்ஜை பெற்றெடுத்தார்.

ஜார்ஜ் லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவமனையில் பிறந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான கேட் ஜார்ஜ் பிறந்த அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிகப்பட்டார். அவர் நேற்று காலை 8.34 மணிக்கு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 3.7 கிலோ எடையுடன் பிறந்தது.
குட்டி இளவரசி பிறந்திருப்பதாகவும், தாயும்-சேயும் நலமாக இருப்பதாக கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டது.

பிற்பகல் இளவரசர் வில்லியம் தனது மகன் ஜார்ஜை மருத்துவமனைக்கு அழைத்து வந்து குட்டி இளவரசியை காட்டினார். அதன் பிறகு மாலை 6.10 மணிக்கு வில்லியம், தனது மனைவி மகளை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு கிளம்பினார்.
அ்பபோது குட்டி இளவரசியின் முகத்தை பத்திரிக்கையாளர்களுக்கு வில்லியம் காண்பித்தார். வில்லியம் மற்றும் கேட் சிரித்த முகத்துடன் கிளம்ப குட்டி இளவரசி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications