சுபான்சு சுக்லா மாதிரி விண்வெளி வீரர் ஆகனுமா? அப்போ இந்த பயிற்சிகளுக்கு நீங்க ரெடியா இருங்க!
வாஷிங்டன்: 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியர் ஒருவர் இன்று விண்வெளிக்கு பறந்திருக்கிறார். சுபான்சு சுக்லா எனும் இந்திய வீரர் மூலம் நாம் மீண்டும் விண்வெளி வரலாற்றில் சாதனை படைத்திருக்கிறோம். சரி, விண்வெளி வீரர் ஆவதற்கு என்ன தேவை? இதற்கான பயிற்சிகள் எப்படி இருக்கும்? இதைப்பற்றி இந்த செய்தி விவரிக்கிறது.
உடல், மனநலம், தொழில்நுட்ப அறிவு, குழுப்பணி எனப் பல அம்சங்களில் விண்வெளி வீரர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள். எனவே இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் முயன்றால் முடியாதது கிடையாது. முதலில் உடல் தகுதி பயிற்சி பற்றி பார்ப்போம்.

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், இதயத்திற்கு இரத்தம் பம்ப் செய்வது கஷ்டமாக இருக்கும். எனவே இதயம் பலவீனமடைய வாய்ப்புள்ளது. இதனால் எலும்புகள் மற்றும் தசைகளும் பாதிக்கப்படும். இதுதான் விண்வெளி வீரர்களுக்கு இருக்கும் முதல் சிக்கல். இதனை சரி செய்ய அவர்களுக்கு 'கார்டியோவாஸ்குலர்' எனும் பயிற்சி கொடுக்கப்படும்.
கார்டியோ பயிற்சிகள் இதயத்தை வலுப்படுத்துகின்றன. இதனால் இதயம் ஒவ்வொரு துடிப்பிலும் அதிக இரத்தத்தை பம்ப் செய்ய முடியும். எனவே ஈர்ப்பு விசை இல்லாத இடமான விண்வெளியில் கூட, சிறப்பாக நம்மால் செயல்பட முடியும். நீண்ட தூர ஓட்டம், நீச்சல், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளைத்தான் 'கார்டியோவாஸ்குலர்' என்கிறார்கள்.
தசை வலிமை பயிற்சி
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால், தசைகள் மற்றும் எலும்புகள் விரைவாக பலவீனமடைகின்றன. விண்வெளியில் மாதங்கள் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் பூமியில் திரும்பியவுடன் நடக்க முடியாமல் போவதற்குக் காரணம் இதுதான். இந்த தசை மற்றும் எலும்பு இழப்பைத் தடுக்க, விண்வெளி வீரர்கள் தினமும் பல மணிநேரம் தீவிரமான தசை வலிமை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புஷ்-அப்ஸ், ஸ்க்வாட்ஸ், லஞ்சஸ், புல்-அப்ஸ், பிளாங்க் போன்ற பயிற்சிகளைத்தான் தசை வலிமை பயிற்சி என்று சொல்கிறார்கள்.
சமநிலை பயிற்சி
உடலின் சமநிலையைப் பராமரிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வகை உடற்பயிற்சிதான் இது. அசைவற்ற நிலையில் (ஒரு காலில் நிற்பது) அல்லது அசைந்து கொண்டிருக்கும் போது (நடக்கும் போது) நிலைத்தன்மையை பராமரிக்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. விண்வெளியில் மிகப்பெரிய சவால் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைதான். எனவே அங்கு நாம் மிதந்துக்கொண்டே இருப்போம். இந்த நேரத்தில் நமது உடல் சமநிலையை இழக்கக்கூடாது. எனவேதான் இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.
ஸ்பேஸ் வாக்
விண்வெளில் நடப்பதற்காக பயிற்சி தேவை. இது நியூட்ரல் பாயன்சி ஆய்வகத்தில் கொடுக்கப்படும். நியூட்ரல் பாயன்சி ஆய்வகம் என்பது ஒரு பெரிய நீச்சல் தொட்டி. விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்சூட் அணிந்து தண்ணீருக்கு அடியில் பயிற்சி எடுப்பார்கள். இது விண்வெளியில் ஏற்படும் ஈர்ப்பு விசை இல்லாத நிலையை உருவகப்படுத்துகிறது. விண்வெளியில் நடக்கும் போது கருவிகளைக் கையாளுதலுக்கு இங்குதான் பயிற்சி பெறுவார்கள்.
அதேபோல பூஜ்ஜிய ஈர்ப்புவிசையை பழகிக்கொள்ள பாரபோலிக் விமானங்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். இந்த விமானங்கள் மேல்நோக்கி உயர்ந்து பின்னர் கீழ்நோக்கி பாயும். இந்த சமயத்தில் சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை ஈர்ப்பு விசை இல்லாத நிலையை உருவாக்கும்.
இது தவிர மனநல மற்றும் உளவியல் பயிற்சிகளும் வழங்கப்படும். நமக்கு போர் அடித்தால் டீக்கடைக்கு போய்விட்டு வருவோம். ஆனால் விண்வெளியில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. எனவே, இந்த சூழலில் வீரர்களுக்கு மன உறுதி மிக முக்கியம். எனவேதான் உளவியல் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
என்ன மக்களே இப்போது சொல்லுங்கள் விண்வெளிக்கு போக நீங்களும் ரெடியா?
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications