செளதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ரியாத்: செளதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
செளதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான ஷையாத்தில் ஷியா முஸ்லிம்களின் அஸுரா பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிக்கைக்காக ஷியா முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தபோது மர்ம மனிதன் ஒருவன் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக போலீசார் மர்ம மனிதன் மீது தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.
இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தியது ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தின் பக்ரைன் பிரிவு தீவிரவாதி என தெரியவந்துள்ளது. செளதி அரேபியாவில் கடந்த ஓராண்டு காலமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications