பிளாஷ்பேக் 2015: ப்ளூ ஸ்கை.. சிவப்பு ஐஸ்... புளூட்டோவை கிட்டப்போய் எட்டிப் பார்த்த நியூ ஹாரிசான்ஸ்!
நியூயார்க்: சூரியக்குடும்பத்தில் ஒரு கோளான புளூட்டோவை இந்தாண்டு நாசாவின் நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் மிகவும் அருகில் போய் புகைப்படம் எடுத்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தொடர்ந்து பூமிக்கு அது அனுப்பி வருகிறது.
பூமியைத் தாண்டி மற்ற கிரகங்கள், பால்வெளிமண்டலம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கென பல்வேறு விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், புளூட்டோ கிரகத்தை ஆராய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் 9 ஆண்டு பயணத்திற்குப் பிறகு இந்தாண்டு, அந்த கிரகத்தைக் கடந்து சென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது.

9வது கிரகம்...
சூரிய குடும்பத்தின் ஒன்பதாது கோளாக கூறப்பட்டு வந்தது புளூட்டோ கிரகம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவைப் போல் 40 மடங்கு தூரம் இடைவெளி கொண்டது இந்தக் கிரகம்.

நியூ ஹாரிசான்ஸ்...
பூமியின் நிலாவை விட சற்றே சிறிதான இந்தக் கிரகத்திற்கு ஐந்து நிலாக்கள் உள்ளன. பனியால் உறைந்து போயுள்ள இந்த கிரகத்தைப் பற்றி ஆராய சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது.

ஜெட் விமானத்தை விட...
கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மணிக்கு 58,536 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இது பூமியிலிருந்து கிளம்பியது. ஒரு ஜெட் விமானத்தை விட 100 மடங்கு அதிவேகமானது இது.

விதவிதமான புகைப்படங்கள்...
இந்த விண்கலமானது கடந்த ஜூலை மாதம் புளூட்டோ கிரகத்தைக் கடந்து சென்றது. அப்போது புளூட்டோ கிரகத்தை விதவிதமான கோணங்களில் ஆயிரக்கணக்கில் அது புகைப்படம் எடுத்தது.

அரிய தகவல்கள்...
அந்தப் புகைப்படங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்ந்து அது அனுப்பி வருகிறது. அந்தப் புகைப்படங்கள் மூலம் புளூட்டோ மற்றும் அதன் நிலாக்கள் குறித்த பல அரிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற்று வருகின்றனர்.

புளூட்டோவிலும் நீர்...
அதன் அடிப்படையில் புளூட்டோவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அந்த நீரானது சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே உறைந்து போய் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, எதனால் அவை சிவப்பு நிறத்தில் தோன்றுகின்றன என்பது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நீலவானம்...
இது தவிர, நியூ ஹாரிசான்ஸ் எடுத்தனுப்பிய புகைப்படங்களின் அடிப்படையில் புளூட்டோவில், பூமியைப் போலவே நீலநிற வானம் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

ஒளிச்சிதறல்...
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் சிதறல், வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் மீது மோதும்போது வானம் நீலமாகத் தோன்றுவதால் புளூட்டோவின் வானம் நீலமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது.

இதய வடிவம்...
இதேபோல், புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பில் இதய வடிவம் போன்ற அமைப்பு இருப்பதும் நியூ ஹாரிசான்ஸ் புகைப்படம் மூலம் தெரியவந்தது. 8 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்த இந்த காதல் சின்னத்தை 'திமிங்கலம்' என்று செல்லமாக விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தெள்ளத் தெளிவான போட்டோ...
ஜூலை மாதம் முதல் தொடர்ந்து புளூட்டோ குறித்து ஆச்சர்யமான தகவல்களை வெளியிட்டு வரும் நியூ ஹாரிசான்ஸ் விண்கலம், இம்மாத தொடக்கத்தில் புளூட்டோவின் தெள்ளத் தெளிவான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.

நம்பிக்கை...
ஒரு பிக்சலுக்கு 250-250 அடி வரை கொண்ட இந்த புகைப்படங்கள் புளூட்டோ கிரகம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு...
இனியும் தொடர்ந்து நியூ ஹாரிசான்ஸ் புகைப்படங்களை அனுப்ப உள்ளது. எனவே அவற்றை விஞ்ஞானிகள் அதிக ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
2015ம் ஆண்டின் அறிவியல் ஆச்சரியங்களில் இதுவும் ஒன்றாக அமைந்து போனது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications