மாயமான மலேசிய விமானம் கிடைக்காமலேயே போய்விட்டால்?
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் கண்டுபிடிக்க முடியாமலேயே போனால் என்னவாகும்?
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமாகி 11 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் விமானம் என்ன ஆனது, அதில் பயணித்தவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
விமானம் கிடைக்குமா, கிடைக்காதா என்றே தெரியாமல் உள்ளது.

மாயமாகியே விட்டால்
மாயமான விமானம் கிடைக்காமல் அப்படிய மாயமாகவே போய்விட்டால் என்ன ஆகும். அப்படி நடக்காது ஆனால் நடந்தால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கு தான் அது தாங்க முடியாத துயராகிவிடும்.

நன்பகத்தன்மை
மலேசிய விமானம் கிடைக்காமலேயே போனால் மக்களுக்கு விமான நிறுவனங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போகும்.

சிஸ்டம்கள்
உலகில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தப்படும் ரேடார் டிராக்கிங் தொழில்நுட்பம் 1950களில் முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. பணம் செலவாகும் என்பதால் பழை தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறார்கள்.

தொழில்நுட்பம்
புதிய தலைமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு 70 முதல் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

நெருக்கடி
மலேசிய விமானம் மாயமானது விமான நிறுவனங்கள் மற்றும் அரசுகள் விமானங்களை கண்காணிக்கும் முறையை மாற்ற வேண்டும் என்ற நெருக்கடியை அளித்துள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்கள்
மலேசிய விமானம் கிடைக்கவில்லை என்றால் நஷ்டஈடு வழங்க உத்தரவிடுவதில் நீதிமன்றங்களுக்கு பெரும் தலைவலி ஏற்படும். விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைக்காத நிலையில் நஷ்டஈட்டை விமான நிறுவனம், தயாரிப்பாளர் அல்லது வேறு யாராவது தான் நஷ்டஈடை கொடுக்க வேண்டும் என்று கூறுவதில் சிக்கல் ஏற்படும்.

உறவினர்கள்
விமானம் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் உறவினர்கள் துயரம் அடைவார்கள். சிலர் விமானத்தில் பயணித்த தங்கள் உறவினர் எங்காவது இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புடனேயே வாழ்வார்கள்.

1965
கடந்த 1965ம் ஆண்டு 69 பேருடன் சென்ற அர்ஜென்டினா ராணுவ விமானம் மாயமானது. அந்த விமானம் இது வரை கண்டுபிடிக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications