எதிரினு கூட பார்க்கலையே.. பாகிஸ்தானியர்களின் 1.5 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியா.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் தான் போர் நடந்தது. பாகிஸ்தான் கெஞ்சியதால் போரையும் நம் நாடு நிறுத்தியது. இருப்பினும் பாகிஸ்தான் திருந்தவில்லை. நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறது. அதுமட்டுமின்றி அணுஆயுத தாக்குதல் நடத்துவோம். சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணையால் தாக்கி அழிப்போம் என்று திமிராக பாகிஸ்தான் பேசி வருகிறது. இப்படி பாகிஸ்தான் அட்டூழியம் செய்தாலும் கூட பாகிஸ்தானின் 1.5 லட்சம் மக்களின் உயிர்களை நம் நாடு காப்பாற்றி உள்ளது.

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக நம் நாடு அதிரடி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை, ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. இதில் அலறிய பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி கெஞ்சியது. நம் நாடும் போரை நிறுத்தியது.

pakistan flood india

ஆனாலும் பாகிஸ்தான் மட்டும் திருந்தவில்லை. வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் தொடர்ந்து நம் நாட்டை சீண்டி வருகிறார். சிந்து நதியில் அணை கட்டினால் ஏவுகணைகளை ஏவி தாக்கி அழிப்போம். எங்களிடம் அணுஆயுதம் உள்ளது. பாகிஸ்தான் அழியும் நிலை வந்தால் அதனை பயன்படுத்தி உலகின் 50 சதவீதத்தை அழித்து விடுவோம் என்று திமிராக பேசினார்.

இப்படி பாகிஸ்தான் வாய்க்கொழுப்புடன் பேசினாலும் கூட நம் நாடு தொடர்ந்து மனிதாபிமான நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. பாகிஸ்தான் எதிரி நாடு தானே என்று நினைக்காமல் தொடர்ந்து கருணை காட்டி வருகிறது. அந்த வகையில் தான் இந்தியா தற்போது பாகிஸ்தானில் 1.50 லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளது. அதாவது வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காஷ்மீரிலும் மேகவெடிப்பு ஏற்பட்டு அவ்வப்போது கனமழை கொட்டி வருகிறது.

இதனால் சட்லஜ், ரவி மற்றும் செனாப் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக ரவி ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது. இந்த ஆறுகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணம் வழியாக கடலுக்கு செல்கிறது. நம் நாட்டில் பெய்த கனமழையால் வெள்ளம் கரைபுரண்ட நிலையில் அதுபற்றி பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அலர்ட் செய்தது. பாகிஸ்தானில் உள்ள இந்திய துாதரகம் மூலம் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அதாவது ரவி ஆற்றின் குறுக்கே உள்ள தெயின் அணை மற்றும் மத்பூர் அணைகள் முழு கொள்ளவை எட்டுவதால் அணை மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்படும் என்றும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் அலர்ட் செய்யப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூர், கசூர் ஆகிய பகுதிகளிலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரை, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். மொத்தம் 1.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்தியா நினைத்து இருந்தால் பாகிஸ்தானுடன் இருக்கும் மோதல் போக்கு காரணமாக அலர்ட் செய்யாமல் தண்ணீரை திறந்து விட்டு இருக்கலாம். ஆனால் நம் நாடு அப்படி செய்யவில்லை. எதிரி நாடாக இருந்தாலும் கூட அந்த மக்களின் உயிர் முக்கியம் என்ற அடிப்படையில் வார்னிங் செய்து முன்கூட்டியே மக்களை வெளியேற்றி 1.50 லட்சம் பேரின் உயிரை காப்பாற்றி உள்ளது. நம் நாட்டின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

முன்னதாக பாகிஸ்தானில் ஜூன் முதல் பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளத்திற்கு இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 7,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், நரோவால் மாவட்டத்தில் உள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப், சீக்கியர்களின் முக்கிய குருத்வாராக்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் 80,000க்கும் மேற்பட்ட இந்திய சீக்கியர்கள் வழிபாடு நடத்த செல்கின்றனர். இந்த குருத்வாரா, ராவி ஆற்றின் வெள்ள நீரில் மூழ்கியது. அங்கு, 100-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் இந்தியர்கள் உள்ளனரா என்ற தகவல் இல்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+