வெளிநாட்டுக் குழந்தைகள் மீதான அமெரிக்கர்களின் மோகம் குறைகிறது
நியூயார்க் : அமெரிக்க தம்பதிகளிடையே வெளிநாட்டுக் குழந்தைகளை தத்தெடுக்கும் மோகம் குறைந்து வருவதாக தெரிகிறது. தத்தெடுக்கும் விகிதம் கடந்தாண்டு 9 சதவீதம் அளவில் குறைந்துள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 33 ஆண்டுகளில் இது மிகக் குறைந்த அளவு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2014ம் ஆண்டு 6,441 வெளிநாட்டுக் குழந்தைகளை அமெரிக்க தம்பதிகள் தத்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த விகிதாச்சாரமானது கடந்த 2013ம் ஆண்டு 7,094 ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த 2004ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 22,884 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து. அதாவது 3 மடங்கு அதிகமாக இருந்தது.

வெளிநாட்டுக் குழந்தைகள்...
இதன் மூலம் வெளிநாட்டுக் குழந்தைகளை தத்தெடுக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையானது ஆண்டு தோறும் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டை ஒப்பிடும் போது, தற்போதைய நிலவரப்படி தத்து எடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்துள்ளது.

காரணம் தெரியவில்லை...
இந்த குறைவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இது தத்தெடுப்பு தொடர்பான அமெரிக்க வழக்கறிஞர்களின் மத்தியிலும் கூட புரியாத புதிராக உள்ளதாம். இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்குமா என்ற கேள்விக்கு பதில் தருவது கடினம் என்று உள்துறை அமைச்சக தத்தெடுப்புப் பிரிவு தலைவர் டிரிஷ் மாஸ்கியூ கூறியுள்ளார்.

சீனா முதலிடம்...
அமெரிக்கர்களால் அதிக அளவில் தத்தெடுக்கப்படும் வெளிநாட்டுக் குழந்தைகளில் சீனாதான் முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் இது தற்போது 10 சதவீதம் குறைந்து விட்டது. எத்தியோப்பிய குழந்தைகளுக்கு இதில் 2வது இடம் கிடைத்து வந்தது. கடந்த ஆண்டு 716 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டன. ஆனால் இது 2012ம் ஆண்டு 1568 ஆக இருந்தது.

ரஷ்யக் குழந்தைகள்...
அதற்கு அடுத்த இடங்களில் உக்ரைன், ஹெய்தி, தென் கொரியா ஆகியவை வருகின்றன. ரஷ்யாவுக்கு 2012ம் ஆண்டு இந்தப் பட்டியலில் 3வது இடம் கிடைத்திருந்தது. ஆனால் அது வேகமாக குறைந்து விட்டது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications