காஷ்மீர் தாக்குதல்.. சுதந்திர போராளிகளா? துணை பிரதமர் மீது பாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை 'சுதந்திர போராளிகள்' என்று அழைத்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார். முன்னதாக ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைதியாக இருந்ததற்காகவும் கனேரியா முன்பு விமர்சித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெல்ல மெல்ல மாறி வந்தது. கோடை கால சுற்றுலாத்தலமாக பல இந்தியர்களுக்கு பிடித்த பகுதியாக மாறி வந்தது.உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த வண்ணம் இருந்தார்கள்.

மினி சுவிட்சர்லாந்து என போற்றப்படும் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடந்த இரண்டு நாள் முன்பு வந்தார்கள். இந்த ஊர் மலைப்பாங்கான பள்ளத்தாக்கு மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊராகும். பைரசன் பரந்த புல்வெளிகளை கொண்ட அழகிய இடம் ஆகும்.
இங்குள்ள பைசரன் குன்றில் ஒரு ஏரியும், மலையேற்ற வீரர்களுக்கான இடமும் உள்ளது. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்ல முடியாது. ஆறு, கரடுமுரடான பாதையில் தான் , சுற்றுலாப் பயணிகள் கால்நடையாகவும், குதிரைகளில் சவாரி செய்தும் மட்டுமே சென்று வருகிறார்கள். கடந்த இரண்டு நாள் முன்பு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றார்கள். அப்போது பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக் காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து தாக்கினார்கள். மொத்தம் 26 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த மிக மோசமான தாக்குதலான இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுபற்றி அப்போது கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷக்பாஸ் ஷெரீப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? திடீரென உங்கள் (பாகிஸ்தான் படைகள் ஏன் திடீரென்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது ஏன்? ஏனென்றால், நான்கு யோசித்து பார்த்தால் உங்களுக்கு உண்மை தெரியும் - நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் பஹல்காமில் நடந்த தாக்குதல் தொடர்பாக உலகம் முழுவதிலுமிருந்து பல விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளை "சுதந்திர போராளிகள்" என்று பாகிஸ்தான் துணை பிரதமர இஷாக் தார் கூறியிருந்தார்.. இதை கேட்டு கொதித்து போன பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா கூறுகையில், "பாகிஸ்தான் துணைப் பிரதமர் பயங்கரவாதிகளை "சுதந்திரப் போராளிகள்" என்று அழைப்பது வெறும் அவமானம் மட்டுமல்ல - அது அரசால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதும் ஆகும்," என்று கூறினார்.
இதற்கிடையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிக்கிழமை, பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமை நீரஜ் சோப்ரா பெங்களூர் போட்டிக்கு அழைத்ததற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதையடுத்து தன்னை குறி வைத்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்த நீரஜ் சோப்ரா, கடுமையாக சாடினார், இது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாள் முன்பு அனுப்பப்பட்டது. ஒரு தடகள வீரரிடமிருந்து மற்றொரு விளையாட்டு வீரருக்கு அழைப்பு என்று தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பாரிஸ் விளையாட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். அப்போது தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீமை மே 24 அன்று பெங்களூருவில் நடைபெற உள்ள கிளாசிக் தடகளப் போட்டியின் தொடக்க விழாவிற்கு வருமாறு நீரஜ் சோப்ரா அழைத்திருந்தார். ஆனால் நதீம் வேறு சில காரணம் காட்டி வர மறுத்துவிட்டார். எனினும் நீரஜ் அழைத்ததை கூறி சிலர் கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இதனால் நீரஜ் சோப்புரா நொந்து போய் கிடக்கிறார்.












Click it and Unblock the Notifications