துபாயில் இந்திய கள்ள நோட்டுகள் வைத்திருந்த 4 பாகிஸ்தானியர்களுக்கு சிறை
துபாய்: துபாயில் போலி இந்திய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 4 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் கள்ளநோட்டு கைமாற்றப்படுவதாக ஐக்கிய அமீரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் கள்ளநோட்டை வாங்குபவர்கள் போல நடித்து பாகிஸ்தானைச் சேர்ந்தவரை அணுகியுள்ளார். இதையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் இந்திய கள்ளநோட்டுகளுடன் வந்து அதை மப்டியில் இருந்த போலீஸ்காரரிடம் அளித்தனர்.
அப்போது அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த ரூ. 47 லட்சத்து 14 ஆயிரத்து 716 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின்படி 4வது நபர் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது அந்த ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தங்களுக்கு தெரியவே தெரியாது என்றனர்.
கள்ளநோட்டை மாற்ற முயன்ற அவர்களுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அந்த 4 பேருக்கும் தலா ரூ. 85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனை காலம் முடிந்த பிறகு அந்த 4 பேரும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications