சிங்கப்பூர் சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ்.. ஆப்பிரிக்க வகை சிங்கங்களுக்கும் பாதிப்பா?
4 சிங்கங்களுக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது
கோலாலம்பூர்: சிங்கப்பூரில் தொற்று எகிறி வருகிறது.. இதனால் 4 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது... தொற்று பரவிய காலத்தில் மிக தீவிரமான தடுப்பு நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்திருந்தது..
மக்களும் ஒத்துழைப்பு தந்த நிலையில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் மறுபடியும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது..

சிங்கப்பூர்
4000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உள்ளதாக கண்டறியப்பட்ட நிலைலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் பெருகிவருகிறது.. இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரம் பேரை கொரோனா தாக்கியுள்ளது. 523 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. சிங்கப்பூரில் இனி வரும் காலங்களில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழக்கக்கூடும் என்று அந்நாட்டின் சுகாதார மூத்த அமைச்சர் ஏற்கனவே எச்சரிக்கையும் விடுத்திருந்தார்...

வைரஸ்
மிகச்சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நாடு என்ற போதிலும், இப்படி ஒரு நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்... இது மக்களுக்கு மேலும் கலக்கத்தை தந்தது.. இப்போது நிலைமை என்னவென்றால், கொரோனா வைரஸ் மிருகங்களையும், பறவைகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது...

சோர்வு
சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலையில் 4 ஆசிய வகை சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது... இங்குள்ள மிருகக்காட்சி சாலையில் 9 ஆசிய வகை சிங்கங்களும், 5 ஆப்பிரிக்க வகை சிங்கங்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றை திறந்தவெளியில் நடமாட விட்டு இருந்தார்கள்..இப்போது இந்த ஆசிய வகை சிங்கங்கள் பார்ப்பதற்கு சோர்வாக இருந்துள்ளன..

டெஸ்ட்
சில நாட்களாகவே சளி அதிகமாக இருந்துள்ளது.. அதனால் சிங்கங்களுக்கு உடனடியாக மெடிக்கல் டெஸ்ட் நடத்தப்பட்டது.. அப்போதுதான், 4 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது... எனினும் நல்ல ஆரோக்கியத்துடன் அவைகள் இருக்கிறதாம்.. சாப்பாடும் நன்றாக சாப்பிடுகிறதாம். அதேபோல, ஆப்பிரிக்க வகை சிங்கங்களுக்கும் கொரோனா டெஸ்ட் நடந்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications