நம்மூர்ல நாய் பண்ற வேலைய ஜெர்மனில ஒரு நரி பண்ணி இருக்கு.. டோரோ ‘அப்டி’ கத்துறது தப்பேயில்ல!
ஜெர்மனியில் ஷூ திருடும் நரியின் செயல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெர்லின்: ஜெர்மனியில் இரவு நேரங்களில் வீட்டு வாசல்களில் இருந்த ஷூக்களைத் திருடிச் சென்ற திருடன் யாரென்று கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் மக்கள்.
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் மாயமாகின. மற்ற அனைத்துப் பொருட்களும் அப்படியே பத்திரமாக இருக்க, ஷூக்களை மட்டும் திருடிச் செல்வது யார் என அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான ஷூக்கள் திருடு போயின.

இதனால் எப்படியும் ஷூ திருடனைப் பிடித்தே ஆக வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அவர்களது தீவிர கண்காணிப்பில் ஒருநாள் திருடன் அகப்பட்டான். கையும் களவுமாக.. இல்லையில்லை வாயும் களவுமாக திருடனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் ஷூக்களை திருடிச் சென்றது மனிதனல்ல.. ஒரு நரி. பிறகு அதைப் பிடித்து போலீசிலா கொடுக்க முடியும்.
சத்தமில்லாமல் அந்த நரியைப் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, அது திருடிச் சென்ற ஷூக்களைப் பதுக்கி வைத்திருந்த இடத்தை அப்பகுதி அவர்கள் கண்டுபிடித்து விட்டனர். ஷூக்களைப் பறி கொடுத்தவர்கள் மீண்டும் தங்களது ஷூக்களைத் திரும்ப எடுத்துச் சென்றனர். ஆனால் காணாமல் போனதில் ஒரு ஷூ மட்டும் கிடைக்கவில்லையாம்.
நம்மூரில் வீட்டு வாசலில் கழட்டி வைக்கும் செருப்புகளில் ஒன்றை நாய் தூக்கி சென்று விடுவது வழக்கம்தான். ஆனால் நாய் கூட ஒரு செருப்பைத் தான் தூக்கிச் செல்லும். ஆனால் இந்த நரியோ சரியாக ஜோடியாக ஷூக்களைத் திருடிச் சென்றதுதான் அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் டோரா கத்துவது போல.. 'குள்ளநரி திருடக் கூடாது.. குள்ளநரி திருடக் கூடாது' என்பது தான் தற்போது அங்குள்ள மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications