பாரீஸ் தாக்குதலுக்கு பதிலடி... சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது சரமாரி விமான தாக்குதல்!!
பாரீஸ்: உலகை உலுக்கிய பாரீஸ் தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வெள்ளிக்கிழமை இரவு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு விடுதிகள் என பல இடங்களில் பயங்கர தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் மொத்தம் 129 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர்.

இன்னமும் 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பாரீஸ் நகர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியின் தந்தை உள்பட 7 பேரை பிடித்து பிரான்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத் தாக்குதல் தொடர்பாக பெல்ஜியத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிரியாவில் பிரான்ஸ் விமானப் படையை சேர்ந்த 10 போர் விமானங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் மீது சரமாரியாக குண்டுகளை வீசிஉள்ளது. இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து புறப்பட்டு சென்ற பிரான்ஸ் விமானங்கள் அமெரிக்கா உதவியுடன் இத் தாக்குதலை நடத்திஉள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications