For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள்.. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆதங்கம்

Google Oneindia Tamil News

சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.. கனடாவில் காலிஸ்தான் செயல்பாடு குறித்து ஜெய்சங்கர் அதிருப்தி

கான்பெர்ரா: கனாடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செயல்பட்டு வருவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வன்முறையை நியாயப்படுத்தும் அமைப்புகளால் ஜனநாயக சமூகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் 13-வது வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

தலைநகர் கான்பெர்ரா நகரில் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வாங்- ஐ இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் ஜெய்சங்கர் கூறியதாவது:-

ஓநாய் சைவமாகுமா? ஜாதி வருணத்தை மறக்க சொன்ன ஆர்.எஸ்.எஸ். பகவத்துக்கு கி.வீரமணி கடும் பதிலடி ஓநாய் சைவமாகுமா? ஜாதி வருணத்தை மறக்க சொன்ன ஆர்.எஸ்.எஸ். பகவத்துக்கு கி.வீரமணி கடும் பதிலடி

முறைகேடாக பயன்படுத்தக்கூடாது

முறைகேடாக பயன்படுத்தக்கூடாது

கனடாவில் இருந்து ஒட்டவா வரை இயங்கி வரும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் தொடர்பான பிரச்சினையை இந்தியா எழுப்பி வருகிறது. ஜனநாயக சமூகத்தில் அளிக்கப்படும் சுதந்திரங்களை இத்தகைய சக்திகள் முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. இந்த சக்திகள் உண்மையில் வன்முறை மற்றும் மதவெறியை ஆதரிக்கின்றன. கனடா அரசாங்கத்துடன் அவ்வப்போது இது குறித்து நான் பேசி வருகிறேன். கனடா வெளியுறவுத்துறை அமைச்சருடன் இது குறித்து நான் பேசுகிறேன்.

கனடாவில் வெறுப்பு குற்றங்கள்

கனடாவில் வெறுப்பு குற்றங்கள்

உள்நாட்டில் ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பது போல வெளிநாடுகளில் உள்ள நாடுகளுக்கும் ஜனநாயகம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அதேபோல், கனடாவில் வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பதால் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்தியா அறிவுறுத்தல் விடுத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

பயண எச்சரிக்கையில்

பயண எச்சரிக்கையில்

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ''குடிமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இத்தகைய பயண எச்சரிக்கையை விடுக்கிறோம். எனவே, பயண எச்சரிக்கையில் வேறு எதையும் நீங்கள் வாசிக்கக் கூடாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் சில நாடுகளின் செயல்கள் அவர்களின் சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை பிரதிபதிலிக்கும் வகையில் உள்ளது'' என்று தெரிவித்தார். இந்த பயண எச்சரிக்கை அறிவுறுத்தலில் பதிலுக்கு பதில் நடவடிக்கை எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் ஜெய்சங்கர் இவ்வாறு பேசினார்.

சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல்

சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல்

முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று இந்தியா பயண எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதற்கு மறுவாரமே, இந்தியாவில் எல்லையோர மாநிலங்களுக்கு செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்று கனடா தனது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்து இருந்தது. அதேபோல், கனடாவில் அவ்வப்போது வெறுப்பு குற்றங்களில் காலிஸ்தான் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாதம் 15 ஆம் தேதி கூட அங்குள்ள சுவாமி நாராயணன் கோவில் மீது காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தின.

இந்தியா கண்டனம்

இந்தியா கண்டனம்

இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்தது. அதேபோல், கடந்த மாதம் 23 ஆம் தேதி பஞ்சாப்பை தனி நாடாக பிரித்து அறிவிக்கக் கோரி பிராம்ப்டன் நகரில் காலிஸ்தான் அமைப்புகள் வாக்கெடுப்பு நடத்தின. இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவிது இருந்தது. கனடாவில் பிரிவினைவாத மற்றும் இனவாத குழுக்கள் வாக்கெடுப்பு நடத்தியது கேலிக்கூத்தான செயல் என்று கடுமையான வார்த்தைகளால் இந்தியா கண்டனம் தெரிவித்து இருந்தது. இத்தகைய சூழலில்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு பேசியிருக்கிறார்.

English summary
Union External Affairs Minister Jaishankar expressed his displeasure over the activities of Khalistan separatists in Canada and said it was necessary to ensure that the freedoms of a democratic society are not misused by organizations that justify violence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X