நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய 9 பேரை ரிஸ்க் எடுத்து மீட்டு வந்த இந்திய ராணுவத்தின் “துருவ்”
கோர்க்கா: நேபாளத்தையே புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, கடந்த 17 நாட்களாக மீண்டு வர முடியாமல் தொலை தூர கிராமத்தில் சிக்கித் தவித்த 2 பிரெஞ்சு மலையேற்ற வீரர்களையும், 8 நேபாள மக்களையும் கோர்க்கா மாவட்டத்தின் மிகவும் ஆபத்தான, ஆள் அரவமற்ற மச்சகோலா பகுதியில் இருந்து காப்பாற்றி கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவு ஹெலிகாப்டரான துருவ்.
அது தவிர, அவர்களை மீட்டு திரும்பும்போது, போக்காரா பகுதியில், சிங்ளா என்ற கிராமத்தில் சிக்கித் தவித்த உடல்நிலை பாதிக்கப்பட்ட 82 வயதான மூதாட்டி ஒருவரையும் காப்பாற்றியுள்ளனர் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய இந்திய ராணுவத்தினர்.

இன்கிரிட் மற்றும் ஜூலியன் ஆகிய அந்த இரு பிரெஞ்சு மலையேற்ற வீரர்கள் நேபாளின் அமைதியான பிரதேசமான கோர்க்கா மாவட்டத்தின் மலைப்பகுதியில் ஏப்ரல் 25 ஆம் தேதியன்று 7.9 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது சிக்கிக் கொண்டனர்.
தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவரின் தகவலின் மூலமாக கிட்டதட்ட 17 நாட்களுக்குப் பின்னர் அவர்களை மீட்டுள்ளது "துருவ்".
மிகவும் ரிஸ்க் எடுத்து இந்த செயலைச் செய்த பெருமைக்குரியவர்கள் இந்திய ராணுவ விமானிகளான லெப்டினட் கவுசிக் மற்றும் மேஜர் தானேஷ் ஆகியோர் ஆவர்..
இந்திய ராணுவத்தின் மீட்புப் படை ஹெலிகாப்டரான ஏ.எல்.ஹெச் துருவ் அதிக மேகங்கள், குறைந்த வெளிச்சம், சூறாவளி, மழை என்று அனைத்தையும் தாண்டிப் பறக்கும் திறன் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications