ஒரு பக்கம் குண்டு மழை.. மறுபக்கம் பாரசூட்டில் இறங்கிய ஹமாஸ் வீரர்கள்! இஸ்ரேலில் இன்று நடந்தது என்ன
இஸ்ரேல்: ஹமாஸ் படைகள் இன்று காலை இஸ்ரேலில் பல இடங்களில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்தத் தாக்குதலில் ஒட்டுமொத்த இஸ்ரேல் நிர்வாகமும் ஆடிப்போய்விட்டது.
இஸ்ரேலில் இன்று விடுமுறை நாளாக இருக்கும் நிலையில், காலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த பகீர் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அங்கே என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
தாக்குதல்: இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று காலை இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது. இஸ்ரேல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படைகள் நடத்தியுள்ளது.. இதனால் அங்கே மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வானம் முழுக்க புகை மண்டலம் சூழ்ந்துள்ள நிலையில், இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே உள்ளூர் நேரப்படி இன்று காலை இஸ்ரேலில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் ஏவுகணை தாக்குதல்: முதலில் பாலஸ்தீனின் ஹமாஸ் படைகள் அதிகாலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி தாறுமாறாக ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளனர். காலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்தத் தாக்குதல் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி முழுக்க புகை மூட்டம் உருவானது. 30 நிமிடங்களுக்கு 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ஹமஸ் படை தாக்குதல் நடத்தியுள்ளது.
பொதுவாக ஏவுகணை தாக்குதல் என்றால் ராணுவ இடங்களைக் குறிவைத்தே நடத்தப்படும். ஆனால், இன்று நடந்த தாக்குதலில் மக்கள் இருக்கும் இடங்களிலும் சேர்த்தே ஏவுகணைகள் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் காலை எழுந்திருக்கும் போதே குண்டுவெடிப்பு சத்தத்துடனேயே பொதுமக்கள் எழுந்துள்ளனர். இந்த குண்டு மழையால் பல்வேறு இடங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்து பாரசூட்: இந்த ஏவுகணை தாக்குதல் ஒரு பக்கம் இருக்க.. மற்றொரு புறம் ஹமாஸ் வீரர்கள் பாரசூட் கொண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். முதலில் ஏவுகணை தாக்குதலை நடத்திய அவர்கள், மறுபுறம் விமானம் மூலம் இஸ்ரேல் நாட்டின் எல்லைக்கு மிக அருகே வந்து அங்கிருந்த பாரசூட் மூலம் இஸ்ரேல் நாட்டிற்குள் இறங்கியுள்ளனர். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் இஸ்ரேல் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜீப் மூலம் நுழைந்த வீரர்கள்: மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால் காமஸ் படைகள் எல்லைகளை உடைத்து ஜீப் மூலமாகவும் உள்ளே நுழைந்துள்ளனர். இஸ்ரேல் படைகளைக் கவனிக்காத நேரத்தில் எல்லை வேலிகளை உடைத்து நொறுக்கிவிட்டு அவர்கள் ஜீப் மூலம் உள்ளே வந்துள்ளனர். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் அப்பாவி மக்களை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இப்படி எல்லா பக்கமும் இருந்தும் ஹமாஸ் படைகள் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் ராணுவம் நிலைகுலைந்து போய்விட்டது. ஹமாஸ் படைகளால் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியாது என்றும் நிச்சயம் அவர்கள் பின்னணியில் வேறு நாடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே ஹமாஸ் படைகளுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரேல் பதில் தாக்குதலையும் ஆரம்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications