காணத்தவறாதீர்கள் 38 ஆண்டுகளுக்கு பிறகு கிறிஸ்துமஸ் நாளன்று வானில் தோன்றும் பெளர்ணமி !
வாஷிங்டன்: 38 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.
முன்னதாக 1977 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று வானில் தோன்றியதாகவும், தற்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 25 ஆம் தேதி முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற அரிய நிகழ்வு இனி 2034 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என குறிப்பிட்டுள்ள நாசா, பொதுமக்கள் இந்நிகழ்வை தவற விடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.நடப்பு ஆண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின் தொடக்கத்தில் தெரியும் முதல் பௌர்ணமியான அது முழு குளிர் நிலவு' (Full Cold Moon) என்றழைக்கப்படும்.
சந்திரனை ஆராயும் நாசாவின் (Lunar Reconnaissance Orbiter- LRO) பணி மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நிலவின் மேற்பரப்பு குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
எல்ஆர்ஓ பணி மூலம் அதிக திறன்வாய்ந்த 7 கருவிகள் மூலம் நிலா குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போதும் கிறிஸ்துமஸ் நாளன்று நிகழும் அரிய நிகழ்வும் ஆராயப்படும் என நாசா அறிவித்துள்ளது.
அந்த அதிசய நிகழ்வு கிறிஸ்துமஸ் தினத்தன்று இரவு 11.11 மணிக்கு முழு உச்சத்தை அடைந்து பிரகாசமாக காட்சி அளிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications