எதிர்காலத்தில் மனிதர்களுக்கு முடி இருக்காது.. "இந்த" 4 உடல் பாகங்களும் கூட மறைந்து போகுமாம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: எதிர்காலச் சந்ததியினர் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது வரும் காலத்தில் மனித உடல்களில் சில உடல் பாகங்களில் படிப்படியாக முடி மறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிணாம வளர்ச்சி காரணமாக வரும் காலத்தில் சில உடல் பாகங்களும் கூட இல்லாமல் போக வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்மை சுற்றி இருக்கும் பலரும் முடி கொட்டும் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பார்கள். சிலருக்குத் தலையில் முடியே வளராது. ஆனால், கை, கால்களில் அளவு கடந்த முடி இருக்கும். அதை நீக்கவே அவர்கள் படாதபாடு படுவார்கள். ஆனால், எதிர்காலச் சந்ததியினர் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. ஆம், வரும் காலத்தில் மனிதர்களுக்கு உடலில் முடியே இருக்காதாம்.

Future Humans May Be Hairless and Body Parts Disappearing Due to Evolution facts that will surprise
Photo Credit:

மாறும் உடலமைப்பு

மேலும், சில உடல் பாகங்களும் கூட இல்லாமல் போய்விடுமாம். இது குறித்து சமூக வலைத்தளப் பிரபலம் சாம் பெரெஸ் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாக அவர் கூறுகையில், "இப்போது உள்ள சில உடல் பாகங்கள், எதிர்காலத்தில் மறைந்து போகும்" என்கிறார். மேலும், இதற்கு ஆதாரமாக நமது உடல் காலப்போக்கில் எவ்வளவு மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் ஒன்று தான் விஸ்டம் டூத். அதாவது மூன்றாவது கடைவாய்ப்பல். முன்பு கிட்டத்தட்ட அனைவருக்கும் இந்த விஸ்டம் டூத் இருந்தது. ஆனால், இப்போது அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகின்றன. தற்போது பிறக்கும் குழந்தைகளில் 35% பேருக்கு இந்த விஸ்டம் டூத் இருப்பதில்லை.

இந்த உடல் பாகங்கள் இருக்காது

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நமது உணவுப் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், நமது தாடைகள் சிறியதாகி வருகின்றன. இதனால், 10,000 முதல் 20,000 ஆண்டுகளுக்குள் விஸ்டம் டூத் முழுமையாக மறைந்துவிடும்" என்றார். அதேபோல குடல்வால் (அப்பென்டிக்ஸ்) பகுதியும் வேகமாக மாறி வருகிறது. இது ஒரு காலத்தில் செரிமானத்திற்கு உதவியாக இருந்தாலும் கூட இப்போது அது நமது உடலுக்கு எந்த விதத்திலும் தேவைப்படுவதில்லை. ஆண்டுக்கு ஒரு கோடி பேர் இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள் என்கிறார் பெரெஸ்.

முடியும் காலி

மேலும், குளிர் மற்றும் பாதுகாப்புக்கு அத்தியாவசியமாகக் கருதப்பட்ட உடல் முடிகளும் மெதுவாக மறைந்து வருகின்றன. இதே விகிதத்தில் முடிகளை நாம் இழந்தால் சுமார் 20,000 ஆண்டுகளில் நாம் உடல் முடிகளை முழுமையாக இழந்துவிடுவோம் என்று பெரெஸ் குறிப்பிடுகிறார். அதாவது வரும் காலத்தில் பிறக்கும் மனிதர்களின் உடலில் முடிகள் எதுவும் இருக்காது. மிருதுவான சருமம் மட்டுமே இருக்குமாம்.

கடந்த காலங்களில் சமநிலைக்கு உதவிய வால் எலும்புகள் (காக்கிஸ் போன்) கூட மறைந்து வருகின்றன. இந்த எலும்புகள் அடுத்த 10,000 ஆண்டுகளுக்குள் முதுகெலும்புடன் இணைந்துவிடலாம் என பெரெஸ் கூறுகிறார். மேலும், கால் விரல்களின் அளவும் தொடர்ந்து சுருங்கி வருகிறது. ஆண் மார்பகங்களிலும் அடுத்த ஒரு லட்சம் ஆண்டுகளிலும் மாற்றம் இருக்கும் என்கிறார்.

ஏற்கனவே மறைய ஆரம்பித்துவிட்டது

இதுபோக உடலின் சிறிய, தனித்துவமான அம்சங்களும் மெல்ல மறைந்து வருகின்றன. சுமார் 10% மக்களின் காதில் காணப்படும் டார்வின் புள்ளி, அதாவது ஒரு சிறிய மடிப்பும் எதிர்காலத்தில் மறைந்துவிடுமாம். முன்பு மரம் ஏறப் பயன்பட்ட கையில் இருக்கும் பால்மாரிஸ் லாங்கஸ் தசை வேகமாக மறைந்து வருகிறது. தற்போது இந்தியர்களில் 65% பேருக்கு இந்தத் தசை இல்லை. உலகளவில் 15% பேருக்கு இந்தத் தசை இல்லாததால், இதுவும் விரைவில் மறைந்துவிடும் எனத் தெரிகிறது.

உடலில் ஏன் இதுபோல மாற்றம் வந்து கொண்டே இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அதற்குக் காரணம் பரிணாம வளர்ச்சி. மனிதர்கள் உருவான நாள் முதலே இந்த பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+