நடந்து வந்து சல்யூட் வைத்த ஜோ பைடன்.. உட்கார்ந்தபடியே ஹாய் சொன்ன பிரதமர் மோடி.. ஜி20 சுவாரசியம்
ஜகார்த்தா: ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
உலகளவில் பொருளாதாரம் சார்ந்த வளரும், வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றாக ஜி20 அமைப்பு உள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்பட 20 நாடுகள் உள்ளன.
இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போதைய மாநாடு இந்தோனேசியாவின் பாலி நகரில் நேற்று துவங்கி இன்று முடிவடைய உள்ளது.

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று துவங்கிய மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோருக்கு அருகருகே இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. அப்போது இருக்கையில் அமர ஜோபைடன் வந்தார். இந்த வேளையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை தேடி வந்து கைக்கொடுத்து இருக்கையில் அமர்ந்தார்.

மாங்குரோவ் காட்டில் விசிட்
இந்நிலையில் இன்று 2வது நாள் ஜி20 மாநாடு துவங்க உள்ளது. இந்த வேளையில் உலக தலைவர்கள் அனைவரும் பாலிநகரில் உள்ள மாங்குரோவ் காட்டுக்கு விசிட் செய்தனர். அப்போது ஒவ்வொரு தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடியும் இருக்கையில் அமர்ந்து இன்னொருவருடன் பேசி கொண்டிருந்தார்.

சல்யூட் அடித்த ஜோபைடன்
இந்த வேளையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் நடந்து வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை பார்த்த ஜோபைடன் புன்னகைத்தார். மேலும் நடந்து வந்தபடியே அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‛வணக்கம்' கூறும் வகையில் சல்யூட் செய்தார். இதை பார்த்த பிரதமர் நரேந்திர மோடியும் கேசுவலாக அமர்ந்திருந்த இருக்கையில் உட்கார்ந்தபடியே கையை உயர்த்தி ‛ஹாய்' சொன்னார். தற்போது இதுதொடர்பான படம் இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

பிற தலைவர்களுடன் சந்திப்பு
முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்தார். குறிப்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து நட்பு ரீதியாக பேசினார். மேலும் அவர் பிரதமரான நிலையில் முதல் சந்திப்பு என்பதால் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும் நேற்று இரவில் டின்னர் வேளையில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கைக்குலுக்கி சந்தித்து கொண்டனர். இதேபோல் பிரதமர் நரேந்திர மோடி பிற நாட்டு தலைவர்களை சந்தித்து வருகிறார்.

தலைமைத்துவம் ஒப்படைப்பு
ஜி20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தலைமைத்துவம் இன்றைய ஜி20 மாநாட்டின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் சில நாட்களுக்கு முன்பு ஜி20 லச்சின், கருப்பொருள் ஆகியவை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications