பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை 'தண்ணி' அடிக்க அழைத்து சர்ச்சையில் சிக்கிய கெயில் !

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியின் போது, தன்னிடம் பேட்டி எடுத்த பெண் டிவி தொகுப்பாளரை 'தண்ணி' அடிக்க அழைத்தார் மேற்கு இந்திய தீவுகள் நட்சத்திர வீரர் கிரிஸ் கெயில். அதுமட்டுமா உங்கள் கண்கள் ரொம்ப அழகு என்று எசக்கு பிசக்காக பேட்டி அளித்துள்ளது. பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்-பாஸ் இருபது ஓவர் போட்டியில், மெல்போர்ன் அணிக்காக விளையாடி வருகிறார் மேற்கு இந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கிரிஸ் கெயில். இன்று டாஸ்மேனியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 15 பந்துகளில் 41 ரன்களை விளாசினார் கெயில். கெயில் 'அவுட்' ஆன பிறகு, டிவி பெண் தொகுப்பாளர் நெல் மெக்லாப்லின் அவரிடம் பேட்டி எடுத்தார்.

Gayle criticized interview with female reporter

அப்போது, உன் கண்களை பார்பதற்காகவே இந்த பேட்டியில் கலந்து கொண்டேன் என அந்த வர்ணனையாளரிடம் வழிந்தார் கெயில். மேலும், ``நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து 'தண்ணி' அடிக்கலாம். வெட்க பட வேண்டாம்'' என்றார்.

பேட்டியை எடுத்த அந்த பெண் கெயிலின் இந்த வர்ணனையால் தர்மசங்கடமானார். எனினும், சமாளித்துக் கொண்டு, தான் வெட்கப்படவில்லை என்றார்.

கெயிலின் இச்செயலுக்கு டிவி நிர்வாகத்தில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் முன்னாள் ஆண்ட்ரூ பிளிண்டாப் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைத்தளங்களிலும் பலர் கெயிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கெய்ல் இதுபோன்று நக்கலாக பேசுவது இயல்பு. இதுபோன்று கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரின்போது பெண் நிருபர் ஒருவர், கெயிலின் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் அடுத்த போட்டியில் வீரர்களின் ஆட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதலளித்த கெய்ல், நல்லது, நான் இதுவரை உங்களைத் தொட்டதில்லை. ஆகவே, எப்படி இருக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை என்று கிண்டலாகக் கூறி சர்ச்சையில் சிக்கி கொண்டார். அதேபோல் இன்றைய பேட்டியிலும் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+