காஸாவில் 'உறங்கும் பிஞ்சு குழந்தைகள்' மீது தாக்குதல் நடத்துவது வெட்கக் கேடானது: பான் கி மூன் கண்டனம்
சான் ஜோஸ்: காஸாவில் அகதிகளாக பள்ளிக்கூடத்தில் தஞ்சமடைந்திருந்த பிஞ்சு குழந்தைகள் உறங்குவதையும் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்தியிருப்பது வெட்ககக் கேடானது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான்கி மூன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் 23 நாட்களாக வெறியாட்டம் போட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் அகதிகளாக தஞ்சமடைந்தோர் தங்கியிருக்கும் அந்த பள்ளிக் கூடங்களைக் கூட இஸ்ரேல் விட்டு வைக்காமல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த உச்சகட்ட வெறியாட்டம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.

பள்ளிக் கூடம் மீது தாக்குதல்
இந்நிலையில் ஜபாலா பள்ளிக் கூடம் ஒன்றில் தங்கியிருந்த அகதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
|
பான்கிமூன் கண்டனம்
இந்த தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி மூன், "இஸ்ரேலின்" பெயரைக் குறிப்பிடாமல் மிகக் கடுமையாக கண்டித்துள்ளார். கோஸ்டரிகோ நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பான்கி மூன் கூறியுள்ளதாவது:

வெட்கக் கேடானது
வடக்கு காஸாவில் உறங்கும் பிஞ்சு குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவதை வெட்கக் கேடானது என்பதைத் தவிர வேறு எப்படியும் சொல்ல முடியாது.

நியாயப்படுத்த முடியாது
மிகவும் வெட்கக் கேடானதும், நியாயப்படுத்த முடியாததுமான இந்த கொடூர தாக்குதலை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

நீதியின் முன்..
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பான்கி மூன் கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications