கறார் காட்டும் இஸ்ரேல்! முற்றிலுமாக முடங்கிய காசா மருத்துவமனைகள்.. உயிரிழப்புகள் டபுள் ஆகும் அபாயம்

Subscribe to Oneindia Tamil

காசா: கடந்த 18 நாட்களாக காசா மீது இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. மறுபுறம் மின்சாரம், உணவு, குடிநீர் போன்ற இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. இதுவரை கைவசம் இருந்த எரிபொருளை கொண்டு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து வந்த காசாவின் மருத்துவமனைகளில் தற்போது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து போய் இருக்கிறது. எனவே காசாவின் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியிடமிருந்து தப்பிய யூதர்கள் அடைக்கலம் தேடி பாலஸ்தீனத்திற்கு வந்தனர். ஆனால் உலகம் முழுக்க உள்ள யூதர்களின் ஆதரவுக்காக, பிரிட்டன், பாலஸ்தீனத்தை உடைத்து யூதர்களுக்காக இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கியது. இதுதான் பாலஸ்தீன பிரச்னையின் தொடக்கப்புள்ளி. அதுவரை தங்கள் நிலத்தில் சுதந்திரமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டனர். பாலஸ்தீனம் எனும் பெரிய நிலம், காசா எனும் துண்டு நிலமாக சுருக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து 1980களில் ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் உருவாகின. அதில் ஹமாஸும் ஒன்று.

Gazas hospitals were completely destroyed due to lack of fuel to generate electricity

இந்த குழுக்களை காரணம் காட்டி காசா மீது இஸ்ரேலும், பல மேற்கு நாடுகளும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கு பதிலடி கொடுக்க ஹமாஸ் பயங்கரவாத செயல்களில் இறங்கியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

இதற்கு எதிராக இஸ்ரேல், காசா மீது கடந்த 18 நாட்களாக வான்வழி தாக்குதலை தொடுத்திருக்கிறது. குறிப்பாக இந்த தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 704 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். காசா என்பது ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு நடுவே இருக்கும் ஒரு துண்டு நிலமாகும். இது மொத்தமாகவே சுமார் 25 மைல் நீளமும், 6 மைல் அகலமும்தான் இருக்கும். இதில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீன மக்கள் வாழ்கின்றனர். இந்த பகுதிக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் என எது வரவேண்டும் என்றாலும் இஸ்ரேலின் அனுமதியில்லாமல் வர முடியாது.

இந்நிலையில் போரை காரணமாக கூறி இந்த பகுதிக்கான அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது. வெளியிலிருந்து இந்தியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்திற்கு சில பொருட்களை உதவிக்காக அனுப்பி வைத்திருக்கிறது. இந்த பொருட்களையும் இஸ்ரேல் முறையாக அனுமதிக்கவில்லை. குறிப்பாக எரிபொருளை உள்ளே விடமாட்டேன் என இஸ்ரேல் முரண்டு பிடித்து வருகிறது. ஏற்கெனவே கைவசம் இருந்த எரிபொருளை கொண்டு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்து வந்த காசாவின் மருத்துவமனைகளில் தற்போது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து போய் இருக்கிறது. எனவே காசாவின் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

மருத்துவமனை செயல்பாடுகள் முடங்கியதால், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எனவே உடனடியாக எரிபொருள் காசாவுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+