"சோளம் விதைக்கையிலே".. ஆஹா.. அமெரிக்காவுக்கே டஃப் தருதே சீனா.. அடுத்த பிளான் இதானாமே.. அப்ப இந்தியா?

இந்த விதைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் சோள மார்கெட் முழுவதுமாக சீனாவால் ஆக்கிரமிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சர்வதேச அளவில் சோள உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கும் நிலையில், அதனை முந்தும் விதமாக சீனா மரபணு மாற்றம் செய்த சோளத்தை விளைவிக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் சராசரி உற்பத்தியை விட நான்கு மடங்கு அதிகம் மகசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் சோளத்திற்கு எப்போதும் கிராக்கி இருக்கிறது. பாப்கான், சோள மாவு, சோளம் என மனிதர்களுக்கும் அதன் கழிவுகள் கால்நடைகளுக்கும் தீவனமாக பயன்படுகிறது. இப்படி இருக்கையில் அமெரிக்காவும் சீனாவும் மட்டுமே உலகம் முழுவதும் உள்ள சோளத்தின் தேவையில் 58%ஐ பூர்த்தி செய்து வருகின்றன. அதேபோல சோள உற்பத்தில் முதல் ஐந்து இடங்களில் உக்ரைனும் இருக்கிறது. ஆனால் தற்போது அங்கு நடந்து வரும் போர் காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சோளத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சீனா தனது உற்பத்தியை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. இப்படி கண்டுபிடிக்கப்பட்டதுதான் மரபணு மாற்றம் செய்த சோள விதைகள். இந்த விதைகளை நடப்பாண்டில் சோதனை அடிப்படையில் சுமார் 6,60,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிட சீனா திட்டமிட்டுள்ளது. இது அதன் ஒட்டுமொத்த சோளம் பயிரிடும் நிலப்பரப்பில் வெறும் 1% ஆகும்.

 மரபணு மாற்றம்

மரபணு மாற்றம்

இது குறித்து சீன விதை மேம்பாட்டாளரின் மூத்த மேலாளர் ஒருவர் கூறுகையில், "மங்கோலியாவின் உட்பகுதிகள், ஜிலின், ஹெபெய் மற்றும் யுனான் ஆகிய மாகாணங்களில் சோதனை அடிப்படையில் இந்த விதைகள் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. இது சோதனை அடிப்படையில்தான் பயிரிடப்படுகிறது என்பதால் குறைவான இடங்களே தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் பல ஆண்டுகளாக மரபணு மாற்றப்பட்ட சோள விதைகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் விளைவை இப்போது சோதனை செய்து பார்க்க இருக்கிறோம்" என்று கூறியுள்ளார். சீனாவில் வெளிநாடுகளிலிருந்து விதைகள் இற்குமதி செய்ய கடும் தடைகள் இருக்கின்றன.

 இறக்குமதி

இறக்குமதி

அதிலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் கால்நடைகளின் உணவு தேவைக்காக பயிரிட மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. பன்றி மேய்ச்சல் என்பது சீனாவின் பிரதானமானதாக இருக்கிறது. எனவே சோள கழிவுகள் இதற்கு நல்ல உணவு ஆதாரமாக இருக்கும். கடந்த ஆண்டு சுமார் 43 மில்லியன் ஹெக்டேர் அளவில் சோளம் பயிரிடப்பட்டு, 277 மில்லியன் டன்கள் அறுவடை செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் சோதனை முறையில் பயிரிடப்படும் சோளம் 4 மடங்கு வரை அதிக மகசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான நடப்பு இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க இருக்கிறது.

தடை

தடை

இதற்கான விதைகளை Beijing Dabeinong Technology Group Co Ltd, Syngenta Group மற்றும் Yuan Longping High-tech Agriculture Co Ltd ஆகிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கியிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட மாகாணங்களை தவிர வேறு எங்கேயும் மரபணு மாற்றப்பட்ட விதை விற்க அரசு அனுமதிக்கவில்லை. ஆனால் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப மரபணு மாற்றப்பட்ட விதைகளை மிக மிக குறைந்த அளிவல் விற்பனை செய்ய சீன அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாட்டின் விவசாய நிலங்களை பொறுத்த அளவில் சுமார் 60% அளவுக்கு சோளம் பயிரிடப்படுகிறது.

 இந்தியாவுக்கும் ஆபத்து

இந்தியாவுக்கும் ஆபத்து

இந்த விளைச்சலை அதிகரிக்க சுமார் 14 மரபணு மாற்றப்பட்ட விதைகளை அந்நாட்டு அரசு உற்பத்தி செய்துள்ளது. இந்த விதைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் சோள மார்கெட் முழுவதுமாக சீனாவால் ஆக்கிரமிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+