கருத்த உடல் பளபளக்க..சிறுத்த உடல் பெருபெருக்க! வருகிறது ’சாக்கடை’ பீர்..குடிக்க முடியுமானு தெரியலயே?
பெர்லின்: மது பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பானம் என்றால் அது பீர் தான்.. வெயில் காலம் என்றாலும் மழைக்காலம் என்றாலும் பீர் குடிப்பதற்கு என்றே ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். நீங்கள் மால்ட் பீர் கோதுமை பீர் ஈஸ்ட் பீர் தான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஆனால் தற்போது ஒரு புதிய பீர் வந்து இருக்கிறது.. அப்படி என்ன அதன் சிறப்பு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு.. மது அருந்துவது உயிரை கொல்லும்.. மது நாடு வீடு உயிருக்கு கேடு என எத்தனை திரைப்படங்களுக்கு முன்பு விளம்பரம் போட்டாலும் நம்ம குடிமகன்கள் அதனை விட்ட பாடு இல்லை.

ஒயினில் ஆரம்பித்து பிராந்தி, ரம், ஜின், ஓட்கா, விஸ்கி என பல மது வகைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மது வகையிலும் கூடுதலாக பல வகைகள் இருக்கிறது.
மதுவகைகள்: உதாரணத்திற்கு பிராந்தியை எடுத்துக் கொண்டால் எக்ஸ் ஓ, டபுள் எக்ஸ்ஓ, சுப்பீரியர், என எக்கச்சக்க வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எத்தனை மது வகைகள் இருந்தாலும் எப்போதும் வாடிக்கையார்களை வெகுவாக கவர்வது பீர் வகைகள் தான்.. குறிப்பாக கோடை காலங்களில் பீர் விற்பனை விண்ணைத் தொடும்.. இதையடுத்து கூலிங் பீர் கிடைக்கவில்லை என குடிமகன்கள் புகார் கூறினால் உடனே பிரிட்ஜில் வைத்து பிளாக்கில் வாங்கியாவது அவர்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர் மதுப்பிரியர்கள்.
புதிய பீர்: தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை காலத்திற்கென்று பிரத்தியேகமாக பல பீர் வகைகள் அறிமுகப்படுத்தப்படுவது உண்டு.அந்த வகையில் இந்த ஆண்டு புதிய பல பீர் வகைகள் டாஸ்மாக் மதுபான கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு பீர் விற்பனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது புதிய வகை பீர் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் அதனை நீங்கள் குடிக்க முடியுமா என்பது தெரியாது.
சாக்கடை பீர்: அப்படி என்னதான் அந்த பீரில் சிறப்பு எனக் கேட்கிறீர்களா வேறு ஒன்றும் இல்லை.. ஏற்கனவே சொன்னது போல மால்ட் பீர், கோதுமை பீர், ஈஸ்ட் பீர் உள்ளிட்ட பல வகைகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் தற்போது அறிமுகப்படுத்தப் போவது சாக்கடை பீர் சாக்கடை நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீர் வகை ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜெர்மனியின் வைசன்பர்க் நகரில் இருக்கும் ரியூஸ் ப்ரூ என்ற பிரபல மதுபானை ஆலை தான் தற்போது சாக்கடை நீரிலிருந்து பீரை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறது.
4 முறை சுத்திகரிப்பு: சைலம் என்ற அமெரிக்க நிறுவனத்துடன் மியூனிச் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அந்த நிறுவனம் தொடங்கி இருக்கிறது. சாக்கடையிலிருந்து எடுக்கப்படும் கழிவுநிறை நான்கு கட்டங்களாக சுத்திகரித்து அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றிய பின் அதனை நொதிக்க வைத்து பீர் தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்காக மதுபான உற்பத்தி ஆலை தனியாக தொடங்கப்பட இருக்கிறது. மேலும் பலமுறை சுத்திகரிக்கப்படும் நீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த பீரை சாப்பிடுவதால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது என்கின்றனர்.
எப்படி தயாராகிறது?: முதல் மூன்று கட்டங்களாக இயந்திரம், பயாலஜிக்கல் மற்றும் கெமிக்கல் முறையில் அந்த நீரை சுத்திகரிக்கும். அதற்கு பிறகு வைசன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நீரானது நான்காவது கட்ட சுத்திகரிப்பில் ஈடுபடுத்தப்படும். அப்போது ஆக்சிஜன் மற்றும் ஜெனரேட்டரை பயன்படுத்தி ஓசோன் வாயுடன் தண்ணிரை கலந்து ஓசோனைசேஷன். இவ்வாறு கழிவுநீரை ஓசோனைசேஷன் செய்யும் போது அதிலுள்ள 80% பொருட்கள் வடிகட்டப்பாடும். அதற்குப் பிறகு அதனை நொதிக்க வைத்து பீர் தயாரிக்கப்படும் என கூறியுள்ளனர் அந்த நிறுவனத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications