வாட்ஸ் அப்பிற்கு திடீர் திடீரென வரும் மிஸ்டுகால்கள்..அதுவும் வெளிநாட்டில் இருந்து..உடனே இதை பண்ணுங்க

உலகம் முழுவது இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட முன்னணி நிறுவனம் வாட்ஸ் அப். குறுஞ்செய்தி அனுப்புவது முதல் இமேஜ்கள், வீடியோக்கள், கோப்புகள் என அனைத்தையும் வாட்ஸ் அப்பில் அனுப்ப முடியும் என்பதால் வாட்ஸ் அப் யூசர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வாட்ஸ் அப்பில் குருப் கிரியேட் செய்து தங்கள் நட்பு வட்டங்களுக்குள் அரட்டை அடிப்பதில் தொடங்கி அலுவலக பயன்பாடு வரைக்கும் வாட்ஸ் அப் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது வாய்ஸ் கால், வீடியோ காலும் பேச முடியும். இதனால், பலரும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் மட்டும் அனுப்பிய காலம் போய் தற்போது ஆடியோ, வீடியோ காலிலும் பேசி வருவதை காண முடிகிறது.
வாட்ஸ் அப் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து விட்ட சூழலிலும் வாட்ஸ் மூலமாக சில மோசடி செயல்களையும் சிலர் அரங்கேற்றி வருகின்றனர். வாட்ஸ் அப்பை மையமாக வைத்து சைபைர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பலருக்கு வெளிநாட்டு எண்களில் இருந்து திடீர் திடீரென அழைப்புகள் வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்து இருந்தனர்.
குறிப்பாக எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிள் இருந்தும் பலருக்கும் கால்கள் வந்துள்ளது. சில வினாடிகள் மட்டுமே வந்து விட்டு தானாகவே கட் ஆகிவிடுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு இருந்தனர். பலருக்கு ஏன் இப்படி மிஸ்டு கால் வருகிறது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிலரோ அதே எண்ணிற்கு கால் செய்ய முயற்சித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சம்பந்தமே இல்லாத அழைப்புகள் வந்தால் உடனடியாக செய்ய வேண்டிய 5 விஷயங்களை பார்க்கலாம்:-
* அழைப்பு வந்தால் எடுக்கக் கூடாது. சம்பந்தமே இன்றி வரும் இதுபோன்ற வெளிநாட்டு அழைப்புகள் அந்தால் தயவு செய்து அதற்கு பதிலளிக்க வேண்டாம். இந்த கால்களுக்கு பதிலளித்தால் நீங்கள் மோசடிக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது.
* பரிசுகள் விழுந்து இருப்பதாகவோ.. லாட்டரியில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்ற தகவலுடன் வரும் மெசேஜ்களை கிளிக் செய்ய வேண்டாம். அதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் உடனடியாக வாட்ஸ் அப்பிற்கு ரிபோர்ட் செய்யவும்
* ஒரே எண்ணில் இருந்து மீண்டும் மீண்டும் அழைப்புகள் வந்தால் உடனடியாக அதை பிளாக் செய்ய வேண்டும். கால் லாக்கில் எண்களை செலக்ட் செய்து பிளாக் செய்து விட முடியும்; அதேபோல், உங்களுக்கு வரும் அழைப்புகள் மோசடியானது என்று நீங்கள் கருதினால் உடனடியாக அந்த எண்ணை ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
* அதேபோல், வாட்ஸ் அப்பில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சமான two-factor authentication-வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதி மூலம் உங்கள் வாட்ஸ் அப்பிற்குள் செல்ல பாஸ்வேர்டுடன் வெரிபிகேஷன் கோடும் கேட்கும். இதனால் வேறும் யாரும் உங்கள் வாட்ஸ் அப்பை முறைகேடாக பயன்படுத்த முடியாது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications