உடலில் ஒருதுளி ரத்தமற்று பிறந்த குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்…..!

"ஹோப் ஜுரேஸ்" என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை கடந்த மாதம் கலிபோர்னியாவின் ஆரஞ்ச் நகரில் பிறந்தது. பிரசவ காலத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே ஜெனிபர் ஜூரேஸ் என்பவருக்கு பிறந்த இக்குழந்தை, பிறக்கும் போதே வெளிறிய நிலையில் காணப்பட்டது.
அப்பொழுதே இக்குழந்தைக்கு ஏதோ ஒன்று உடலில் தவறாக உள்ளது என கணித்த மருத்துவர்கள் ஆராய்ந்து பார்த்த போது குழந்தையின் உடலில் ஒரு துளி ரத்தம் கூட இல்லை என்பது தெரிய வந்தது.
மருத்துவர்களின் கணிப்பின் படி இக்குழந்தை கிட்டதட்ட 80 சதவிகித ரத்தத்தை தாயின் கர்ப்பத்திலேயே இழந்துள்ளது.இது கடுமையான ரத்த சோகையைக் குறிக்கிறது.
குழந்தையின் தாயார் ஜெனிபர் பிரசவத்திற்கு மூன்று வாரத்திற்கு முன்பே குழந்தையிடம் அசைவில்லாததை உணர்ந்துள்ளார்.உடனே சுதாரித்துக்கொண்ட அவர் தன் மருத்துவரை அணுகியுள்ளார்.அப்பொழுதுதான் குழந்தையின் இந்நிலை தெரியவந்துள்ளது.உடனடியாக அறுவைசிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்.
இன்னும் சிறிது தாமதம் ஆகியிருந்தால் தாய்,சேய் இருவரையுமே காப்பாற்றி இருக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை போன்றே ஒரு குழந்தை பலவருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜெனிபரின் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையே அவரையும்,அவரது குழந்தையையும் காப்பாற்றியுள்ளது.
"இக்குழந்தை உயிருடன் பிறந்தது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படுகிறது ,இக்குழந்தையை பரிசோதித்த பிறகே நேரடியாக கருவிலேயே ரத்த இழப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம் "இவ்வாறு சாரோன் பிலிகிரிம் என்ற நர்ஸ் கூறியுள்ளார்.
இதிலிருந்து கருவுற்ற பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கருத்து:
"உங்கள் உள்மனது கருவில் ஏதோ தவறாக உள்ளது என்று கூறினால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.குழந்தையின் உயிருக்கு அதுதான் நல்லது. ஜெனிபர் மற்றும் ஹோப்பே இதற்கு சாட்சி...."
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications