குழந்தையுடன் அமர்ந்திருந்த சகமாணவியை கொடூரமாகத் தாக்கிய 13 வயது சிறுமி கைது
டெக்சாஸ்: அமெரிக்காவில் பொது இடத்தில் சக மாணவியை கொடூரமாக தாக்கியதற்காக 13 வயது மாணவியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், பொது இடத்தில் சக மாணவி ஒருவரை கொடூரமாகத் தாக்குவது போன்ற வீடியோ ஒன்று கடந்த மாதம் 19ம் தேதி இணையத்தில் வெளியானது.
அந்த வீடியோவில் இரண்டு பெண்கள் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவரின் மடியில் சிறுகுழந்தை ஒன்று உள்ளது. அப்போது அங்கு இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு ஆண் வருகின்றனர்.

அதிரடி தாக்குதல்...
அவர்கள் அங்கு அமர்ந்திருக்கும் பெண்ணிடம் சண்டை போடத் தொடங்குகின்றனர். திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மடியில் குழந்தை வைத்திருக்கும் பெண்ணை இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்குகிறார் ஒரு மாணவி.

காயம்...
இதில் நிலைகுலைந்து போகின்றனர் அப்பெண்ணும், அவரது மடியில் உள்ள குழந்தையும். திடீர் தாக்குதலால் தூக்கி வீசப்படும் குழந்தைக்கு சிறிய காயங்கள் ஏற்படுகிறது. இதேபோல், அப்பெண்ணின் கூந்தலைப் பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்துகிறார் அம்மாணவி.

வழக்குப்பதிவு...
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட சிறுமியை டெக்சாஸ் போலீசார் தேடி வந்தனர்.
சரண்...
இந்நிலையில், தற்போது தானாகவே அம்மாணவி போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டான்ஸ் ஆடிய நபர்...
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடந்த போது மாணவிகள் உடன் இருந்த ஆணையும் போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதல் நடந்த போது, அதனைத் தடுக்காமல் டான்ஸ் ஆடியதற்காக அம்மாணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications