‘நானும் ஹாரி திருமணத்திற்குப் போகணும்’... வைரலான 5 வயது சிறுமியின் க்யூட் அழுகை வீடியோ!
ஐந்து வயது சிறுமியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
லண்டன்: இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு தானும் போக வேண்டும் என ஐந்து வயது சிறுமி அழுகின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்தவாரம் இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை இங்கிலாந்தே திருவிழாவாகக் கொண்டாடிய போதும், அதிகாரப்பூர்வமாக திருமணத்திற்கு 600 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்புவிடப் பட்டிருந்தது.

ஆனபோதும், புதுமணத் தம்பதிகளைப் பார்ப்பதற்காகவே அவர்களது திருமண ஊர்வலம் நடைபெறும் சாலைகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தனர்.
ராஜ குடும்பத்தில் நடந்த இந்தத் திருமணத்தை நேரில் பார்க்க இயலவில்லையே என்ற ஏக்கம் அந்நாட்டு மக்கள் பலருக்கும் உள்ளது. இந்நிலையில், தன்னை ஏன் இளவரசர் ஹாரி அவரது திருமணத்திற்கு அழைக்கவில்லை என லோலா என்ற ஐந்து வயது சிறுமி கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில், சிறுமி லோலா, 'தானும் ஹாரி திருமணத்திற்கு செல்ல வேண்டும்’ எனக் கேட்கிறாள். அதற்கு அவரது தாய், 'நாமெல்லாம் அந்தத் திருமணத்திற்கு போக இயலாது. நமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ எனப் பதிலளிக்கிறார். இதனைக் கேட்ட லோரா கதறி அழுகிறார்.
ஹாரியின் திருமணத்தையொட்டி லோராவின் பள்ளியில் தேனீர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழை தவறுதலாக ஹாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் என அச்சிறுமி புரிந்து கொள்கிறாள். இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தினால் அச்சிறுமி அழுகிறாள்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications