பாய்-பிரெண்ட் காணோம்! சர்வதேச அளவில் அலறவிட்ட இளம் பெண்! ஆனால் கடைசியில் காத்திருந்த மெகா ட்விஸ்ட்
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது மாயமான காதலனைத் தேடிச் சென்ற போது, கடைசியில் அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் பதில் கிடைத்துள்ளது.
உலகின் வல்லரசு நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் அனைவரும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சுற்றுலா செல்வார்கள். இதன் மூலம் புதிய நபர்களை கலாசாரங்களையும் அறிந்து கொள்ள முடியும்!
இதுபோன்ற சமயங்களில் வேறு வேறு நாடுகளுக்குச் செல்லும் போது அங்கேயே சில வாரங்கள் தொடங்கி சில மாதங்கள் வரை இருப்பார்கள். இதன் மூலம் அந்த கலாசாரம் குறித்துப் பல விஷயங்களை அறிய முடியும்.

சீனா
அப்படி சீனாவுக்குச் சுற்றுலா சென்ற நார்வே நாட்டை சேர்ந்த ஒருவர் தான் பெரிய சம்பவம் செய்துள்ளார். இந்த சம்பவம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகி உள்ளது. நார்வே நாட்டை சேர்ந்த பால் மெக்கீ என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் சீனா சென்றுள்ளார். அங்கு அவர் ரேச்சல் வாட்டர்ஸ் என்ற இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இருவரும் ஒரு கட்டத்திற்குப் பின்னர் நெருக்கமாகக் கூட பழகத் தொடங்கி உள்ளனர்.

சொந்த நாடு
சில வாரங்கள் ரேச்சல் உடன் ஒன்றாக வாழ்ந்த பால் மெக்கீ திடீரென சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி உள்ளார். இதைக் கேட்டதும் ரேச்சல் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும், சில நாட்களில் மீண்டும் சீனா வந்து அழைத்துச் செல்வதாகப் பால் மெக்கீ உறுதி அளித்துவிட்டுக் கிளம்பி உள்ளார். இருப்பினும், சுமார் 6 வாரங்களுக்குப் பின்னரும் கூட பால் மெக்கீ திரும்பவில்லை. அவரிடம் இருந்து எந்தவொரு மெசேஜூம் வரவில்லை.

கண்ணீர் கடிதம்
இதையடுத்து நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் உள்ள ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் தனது காதலர் குறித்து கண்ணீர் கடிதம் ஒன்றை ரேச்சல் எழுதி உள்ளார். மேலும், சீனாவில் அவருடன் எடுத்த படத்தையும் பகிர்ந்து உள்ளார். அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருக்குமோ என அஞ்சுவதாகவும் தெரிவித்து உள்ளார். அப்போது நார்வே நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அளித்த பதில் தான் ரேச்சலுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.

ஷாக்
அதாவது மெக்கீக்கு நார்வே நாட்டிலேயே திருமணம் நடந்துவிட்டதாகவும் அவருக்குக் குழந்தைகள் கூட உள்ளதாகவும் அப்பெண் பதில் அளித்துள்ளார். இதைக் கேட்டு அந்த பெண் நொந்து போய்விட்டாராம். இப்போது சீனாவில் வசிக்கும் ரேச்சல் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். பிரிட்டன் நாட்டில் பல்கலைக்கழக படிப்பை முடித்த அவர், கடந்த 2019 முதல் சீனாவில் இருந்து வருகிறார். தான் ஏமாற்றப்பட்டு உள்ளதை உணர்ந்துள்ள அப்பெண் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிடலாமா எனச் சிந்தித்து வருகிறாராம்.

புலம்பல்
இந்த இளம் பெண்ணை ஏமாற்றிய பால் மெக்கீ நார்வேவை சேர்ந்தவர். அவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். இருப்பினும், மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மனமுடைந்து தான் சீனாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தான் ரேச்சல் உடன் நெருக்கமாகப் பழகி உள்ளார். இப்போது நார்வே திரும்பியதும், மீண்டும் மனைவி உடன் சேர்ந்து கொண்டாராம்! இதனால் பாவம் புலம்பித் தவிக்கிறார் அந்த சீனத்து பெண்..
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications