கடவுள் தான் நம்மை இனி காப்பாத்தனும்.. இந்தியா உடனான மோதலால் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் புலம்பல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவின் தாக்குதல் மற்றும் போர் நடவடிக்கையில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். அந்த நாட்டின் ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் அவர் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்களை நம் நாடு தயாராக வைத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு பலத்த பதிலடியை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தானுக்கு நம் படை வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அஞ்சி நடுங்கி வருகிறது. இந்தியா தாக்கினால் பதிலுக்கு நாங்களும் தாக்குவோம். இந்தியாவை கண்டு பயப்படமாட்டோம் என்று தொடர்ந்து பாகிஸ்தான் அமைச்சர்கள் கூறி வந்தாலும் கூட அவர்கள் மரண பயத்தில் உள்ளனர். இந்நிலையில் தான் இந்தியாவின் தாக்குதலில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார். இது ராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்து இருப்பதை காட்டும் வகையில் உள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதாவது:
‛‛இந்தியா உடனான மோதலுக்காக வாய்ப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர் ஏற்படாமல் இருக்க நம்மை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால் இந்தியா உடனான மோதல் என்பது குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலைமையை தவிர்க்க பல நாடுகள் முயற்சி மேற்கெண்டு வருகின்றன'' என்று கூறினார். இப்படி இந்தியாவுடனான மோதலுக்கு பயந்து, சொந்த ராணுவத்தினர் மீது நம்பிக்கை இல்லாமல் பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்தியா எல்லையில் தொடர்ந்து விதிமீறல் செய்யும்போது அதற்கு ஏற்ப உரிய பதிலடியை நாம் கொடுப்போம். இந்த பதிலடி குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். தற்போதைய காஷ்மீர் தாக்குதல் குறித்து சார்பு இல்லாத நியாயமான சர்வதேச விசாரணையை நாங்கள் கோருகிறோம்'' என்றார். இதன்மூலம் சண்டை வேண்டாம். விசாரணை மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications