ஹனிமூன் ஜாலி.. பறந்த ஹேப்பி நியூஸ்.. சம்பளம் வேற.. திக்குமுக்காடிய புதுமண தம்பதிகள்.. எங்கேனு பாருங்க
ஹனிமூன் தம்பதிகளுக்கு சம்பளத்துடன்கூடிய 30 நாட்கள் விடுமுறையை சீன அரசு அறிவித்துள்ளது
பெய்ஜிங்: சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்ததாக சில சர்வதேச ஆய்வுகள் சமீபத்தில் தெரிவித்திருந்ததையடுத்து, புதிய அதிரடிகளை சீன அரசு கையில் எடுத்து வருகிறது.
உலக அளவில், மக்கள் தொகை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
ஆனாலும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.. பல நாடுகளில் சுமார் 15-20 வருடங்கள் மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவாக, இப்போது பிறப்பு இறப்பு விகிதாச்சாரத்தில் புதிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்..

கவர்ச்சி சலுகைகள்
இதில் முதன்மையாக உள்ளது சீனா.. 20 வருடங்களுக்கு முன்பேயே, சீன மக்கள்தொகை கட்டுப்பாடு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது... இதன் காரணமாக அந்த நாட்டில், கடந்த சில வருடங்களாகவே, வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை இளையோரை விட அதிகமாக உள்ளதாக கூறப்பட்டது... மேலும், வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கையும், பிறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது... அதாவது, பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வரும் அதே வேளையில் இறப்புகளும் அதிகம் இருப்பதால், அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

புது புது சட்டம்
இதற்கு காரணம், கடந்த 1980ம் ஆண்டு, ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெறக் கூடாது என்று சீனாவில் சட்டம் இயற்றியதால்தான், அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.. கட்டுப்பாடு காரணமாக மக்கள் தொகையில் சமம் இன்மை ஏற்பட்டுள்ளதால், மறுபடியும் மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு 2015க்குப்பின் கொண்டுவரத் தொடங்கியது. எனவே, அந்நாட்டு மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று கடந்த 2021ம் ஆண்டில் சட்ட விதியை மாற்றி அமைத்தது...

ஹனிமூன்
மேலும், கடந்த சில வருடங்களாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசே ஊக்கத் தொகை மானியங்களையும் அந்நாடு வழங்கி வருகின்றது.. இப்போது இன்னொரு ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. சீனாவின் பல்வேறு மாகாணங்கள் திருமண விடுப்பு சார்ந்த விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளனர். கல்யாணத்துக்கு முன்பு, 3 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை இத்தனை நாள் அளித்து வந்தநிலையில், இதையே இப்போது மேலும் சில திருத்தங்களை செய்து, சில மாகாணங்கள் 30 நாள்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளன. புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்க சீனா முடிவெடுத்துள்ளது.. கன்சு, ஷான்சி போன்ற மாகாணங்களில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன..

ஹனிமூன் தம்பதி
ஷாங்காய் மாகாணம் 10 நாள் சம்பளத்துடன் விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளது. கடந்த 60 வருடங்களில் இல்லாத வகையில் கடந்தாண்டு சீனாவில் மக்கள்தொகை சரிவு கண்டது. இதனால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இதுபோன்ற பல திட்டங்களை சீனா தொடர்ந்து அறிவிக்கும் என்று தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகிறது. சீன இளைஞர்களிடையே திருமணம் மற்றும் குடும்பம் குறித்த அணுகுமுறை மாறுதல், பாலின சமத்துவமின்மை மற்றும் குழந்தைகளை வளர்ப்பதில் பொருளாதார சவால்கள் போன்ற பிற காரணிகளும் குழந்தை பிறப்பை மந்தமாக்கியுள்ளது என்றாலும், குறைந்துவரும் மக்கள்தொகையானது, அந்நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதிக்கிறது.. அதனாலேயே, இந்த 3 நாள் லீவு, 30 நாள் லீவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்துக்கது.












Click it and Unblock the Notifications