For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காத்தாட" வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெண்ணை "படம்" பிடித்துக் காட்டிய கூகுளுக்கு அபராதம்!

Google Oneindia Tamil News

மான்ட்ரீல், கனடா: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தனது வீட்டு வாசலில் முன்னழகு தெரிய உட்கார்ந்திருந்த பெண்ணை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கேமரா படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியதால் அந்தப் பெண் கூகுள் மீது வழக்குப் போட்டார். இதை விசாரித்த கோர்ட், கூகுளுக்கு 2250 டாலர் அபராதம் விதித்துள்ளது.

கூகுளின் இந்த செயல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார். தனக்கு இது பெரும் சங்கடத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் பெண்ணின் பெயர் மரியா பியா கிரில்லோ. மான்ட்ரீல் நகரில் வசித்து வருகிறார்.

45,000 டாலர் கொடுங்க

45,000 டாலர் கொடுங்க

கூகுள் ஸ்ட்ரீட் வியூ படத்தால் தனது மானம் போய் விட்டதாக கூறி இவர் மான்ட்ரீல் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதில், தனக்கு மான நஷ்டமாக 45,000 டாலர் வழங்கக் கோரியிருந்தார்.

அவ்வளவு பணம் தேவையில்லை

அவ்வளவு பணம் தேவையில்லை

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், பியாவின் அந்தரங்கத்தில் கூகுள் ஊடுறுவியது உண்மைதான் என்று ஒத்துக் கொண்டது. அதேசமயம், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று கோர்ட் கூறி விட்டது.

2250 டாலர் அபராதம்

2250 டாலர் அபராதம்

மேலும் கூகுளுக்கு 2250 டாலர் அபராதமும், கோர்ட் கட்டணமாக 159 டாலர் கட்டணமும் செலுத்த கூகுளுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2009ல் வெளியான படம்

2009ல் வெளியான படம்

கூகுள் மேப்பின் இந்த படமானது 2009ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். அதில் அந்தப் பெண் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறார். அவரது மார்புகள் பெருமளவில் வெளியே தெரிவது போல காணப்படுகிறது.

கார் கேமரா மூலம்

கார் கேமரா மூலம்

கூகுள் மேப்புக்காக கார்களில் பொருத்தப்பட்ட கேமராக்களில் இந்தப் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இதில் பியாவின் முகத்தை கூகுள் மேப் மறைத்துதான் போட்டுள்ளது. ஆனாலும் தமிழ் சினிமாவில் மரு வைத்தால் மாறு வேடம் என்று காமெடி செய்வது போல, இந்தப் படத்தைப் பார்த்ததுமே இது நம்ம பியா என்று எளிதில் அடையாளம் காண முடியும் அளவுக்குத்தான் அந்தப் படம் உள்ளது.

English summary
Google has been ordered to pay compensation to a woman in Montreal, Canada, after a judge ruled that the tech giant had invaded her privacy. Maria Pia Grillo had claimed she suffered shock and embarrassment after she was searching for her home on Google Map’s Street View in 2009 and discovered that the image they’d used featured her sitting outside the property with ‘part of her breast exposed.’
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X