காதலுக்கு வயதில்லை.. 72 வயது பாட்டியை காதலித்து மணந்த 19 வயது அமெரிக்க இளைஞர்!
பேரனை விட வயது குறைவான இளைஞரைத் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பாட்டி ஒருவர்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் காதலுக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 19 வயது இளைஞர் ஒருவர், 72 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னிசி பகுதியைச் சேர்ந்தவர் அல்மேடா என்ற 72 வயது மூதாட்டி. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் இவர், சமீபத்தில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரைச் சந்தித்துள்ளார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலானது. அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால், இருவீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரித்தனர்.
அல்மேடாவுக்கு 6 பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர். எனவே, இந்த உறவை ஏற்க முடியாமல் அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் தவித்தனர்.
ஆனாலும் தங்கள் காதலில் உறுதியாக இருந்த அல்மேடாவும், கேரியும் இருவீட்டாரையும் சமாதானம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்தத் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
அல்மேடாவின் பேரன் ஆரோனுக்கு 22 வயதாகிறது. தனது புதிய தாத்தா கேரியை விட இவர் மூன்று வயது மூத்தவர். எனவே, தாத்தாவுடன் நண்பரைப் போல் பழக முடிகிறது என்கிறார் ஆரோன்.
இது ஒருபுறம் இருக்க, தங்கள் காதல் பொழுதுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வண்ணமாக, தங்கள் பெயரில் யூடியூப் சானலும், பேஸ்புக் பக்கம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர் இந்த புதுமணத் தம்பதி.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications