நான் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்... சொர்க்கத்தில் இருந்து பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்...
லண்டன்: நான் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்... என்று 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன பாட்டியின் செல்போனில் இருந்து பேத்திக்கு வந்த எஸ்.எம்.எஸ் இங்கிலாந்தில் உள்ள ஒரு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இது யாரோ ஒருவர் செய்த குறும்பு எனத் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் லெஸ்லி எமர்சன் (59) என்கிற பெண் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார். அவருடன், அவர் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன.

இந்நிலையில் அவருடைய பேத்தி ஷெர்ரி (21), தனது பாட்டி இறந்து போனதை மறந்து, வழக்கம் போல நல்ல செய்திகளை தனது பாட்டியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
இதேபோல் அவள் அனுப்பிய செய்திக்கு கடந்த வாரம் திடீரென உன்னுடைய செய்தியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் வந்தது.
உன்னுடைய செய்தியை படித்ததில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை, உன்னுடைய முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று பேத்தியின் எஸ்எம்எஸ்க்கு பதில் வந்து கொண்டிருந்தது.
இதைக் கண்டதும் பேத்தி ஷெர்ரி அதிர்ச்சியடைந்தாள். இதுகுறித்து தனது மாமாவிடம் கூறினாள்.
பாட்டி பயன்படுத்திய செல்போன் நம்பரை அந்நிறுவனம் துண்டிக்காமல், மற்றொருவருக்கு கொடுத்துவிட்டது. அந்த நம்பரில் வந்த செய்தியைப் பார்த்ததும் குறும்பு வாலிபர் பதிலளித்தது துப்பறியும் நிறுவனத்தின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து செல்போன் நிறுவனமும் அந்த குறும்பு வாலிபரும் நேற்று பாட்டியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொண்டனர். இதனையடுத்து இந்த கலாட்டா முடிவுக்கு வந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications