"பெரிய தப்பு பண்ணிட்டாங்க".. ஹிஸ்புல்லாவின் டிரோன் தாக்குதலால் கொந்தளித்த இஸ்ரேல் பிரதமர்
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவை கடுமையாக எச்சரித்துள்ள நெதன்யாகு, "மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள்" எனவும் இஸ்ரேல் மக்களை துன்புறுத்த முயற்சித்தால் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் ஹமாஸ் அமைப்பினர் முன்னெடுத்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில், 250 பேரை பணையக்கைதிகளாகவும் ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.

இதனால், கோபம் அடைந்தத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறி முழு அளவிலான போரை அறிவித்தது. அப்போது முதல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
"இஸ்ரேலின் கோர முகம்".. ஹமாஸ் தலைவர் யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டது எப்படி? பிரேத அறிக்கையில் ஷாக்
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதராவக லெபானானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினர் பல முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல, காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். இதனால், ஹமாஸ் அமைப்பினர் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் வீடு மீது ட்ரோன் ‛அட்டாக்’.. நெதன்யாகுவுக்கு மரண பயம் காட்டிய லெபனான்.. பரபரப்பு
இந்த நிலையில்தான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. சிசேரியாவில் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில், வீட்டின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ளார். பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:- "என் மீதும், எனது மனைவி மீது நடைபெற்ற கொலை முயற்சி மிகப்பெரும் தவறான செயலாகும். இப்படி செய்வதால் என்னையோ இஸ்ரேல் முன்னெடுத்து வரும் எதிரிகளுக்கு எதிரான சண்டையை முடக்கி விடாது. இஸ்ரேல் மக்களை துன்புறுத்த யாராவது முயற்சித்தால் கடும் விலையை கொடுக்க நேரிடும்.
நெதன்யாகு தப்பித்தது எப்படி? பிரதமர் வீட்டில் நடந்த ட்ரோன் ‛அட்டாக் பற்றி இஸ்ரேல் பரபர விளக்கம்
காசாவில் இருந்து எங்களின் பணையக்கைதிகளை நாங்கள் மீட்போம். வடக்கு எல்லையில் வசித்த எங்கள் நாட்டு மக்களுக்கு அவர்களின் வீடுகளை பத்திரமாக திரும்பி ஒப்படைப்போம். போர் தொடர்பான எங்களின் எல்லா இலக்குகளையும் பூர்த்தி செய்ய இஸ்ரேல் உறுதியாக உள்ளது. எதிர்கால தலைமுறைகளுக்கு நமது பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலவரத்தை மாற்றுவோம். பயங்கரவாதிகளையும் அவர்களை அனுப்புவர்களையும் தொடர்ந்து நாங்கள் ஒழித்து கட்டுவோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications