"இஸ்ரேலின் கோர முகம்".. ஹமாஸ் தலைவர் யாஹ்வா சின்வார் கொல்லப்பட்டது எப்படி? பிரேத அறிக்கையில் ஷாக்
டெல் அலிவ்: பாலஸ்தீனத்தின் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். அவரது கைவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் அவர் உயிருக்கு போராடும் கடைசி நிமிட வீடியோவை இஸ்ரேல் வெளியிட்ட நிலையில் யாஹ்யா சின்வார் எப்படி கொல்லப்பட்டார்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவிற்கும் இஸ்ரேலுக்கும் போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போர் தொடங்கி இன்னும் முடியவில்லை. காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் தெற்கு காசாவில் பதுங்கி இருந்த ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் கொன்றது. இவருக்கு வயது 61

இவர் தான் இந்த போருக்கு முக்கிய காரணமாகும். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரை கொன்று பிணைக்கைதிகளாக 250க்கும் அதிகமானவர்களை ஹமாஸ் குழுவினர் பிடித்து சென்றனர். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் யஹ்யா சின்வார்.
பெரிதாக வெடிக்கும் போர்? பிடியை இறுக்கும் இஸ்ரேல்! உள்ளே வரும் ஈரான்! சின்வார் கொலையால் பதற்றம்
இந்நிலையில் தான் யஹ்யா சின்வாரை இஸ்ரேல் தீர்த்து கட்டி உள்ளது. தெற்கு காசாவில் அவர் வசித்த வீட்டை இஸ்ரேல் அடையாளம் கண்டு வான்வெளி தாக்குதல் நடத்தியது. அதில் காயமடைந்த அவரை ட்ரோன் மூலம் அடையாளம் கண்டு இஸ்ரேல் படைவீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். மேலும் அவரது விரல் டிஎன்ஏ பரிசோதனைக்காக வெட்டி எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில் தான் ஹமாஸ் படை தலைவர் யாஹ்யா சின்வார் இறந்தது எப்படி என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அத்னபடி இஸ்ரேல் தாக்குதலில் இறந்த ஹமாஸ் படை தலைவர் யாஹ்யா சின்வாரின் நெற்றியில் குண்டு காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் இஸ்ரேல் படையால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் அவர் இறப்பதற்கு முன்பாக உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக அவரது கையில் காயங்கள் ஆழமாக இருந்துள்ளது. அதோடு விரல் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தேசிய தடயவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சென் குகேலின் உறுதி செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஹமாஸ் படை தலைவர் யாஹ்யா சின்வாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை டாக்டர் சென் குகேலின் பார்வையிட்ட பிறகு இந்த தகவலை அவர் உறுதி செய்துள்ளார்.
வேவு பார்த்த இஸ்ரேல்.. டிரோன் பக்கத்தில் வந்ததும் அதிர்ந்துபோன ஹமாஸ் தலைவர் சின்வார்! வெளியான வீடியோ
இதுபற்றி அவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறியிருப்பதாவது: யாஹ்வா சின்வாரின் கையில் ஆழமான காயம் என்பது உள்ளது. இந்த காயம் என்பது சிறிய ஏவுகணை (small missile) அல்லது டேங்க் ஷெல் ( tank shell) உள்ளிட்டவை தாக்கியதால் ஏற்பட்டு இருக்கலாம். இதனால் கையில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறி உள்ளது. இந்த ரத்தப்போக்கை அவர் electrical cord பயன்படுத்தி நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரால் ரத்தப்போக்கை நிறுத்த முடியவில்லை. கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.
நெதன்யாகு தப்பித்தது எப்படி? பிரதமர் வீட்டில் நடந்த ட்ரோன் ‛அட்டாக் பற்றி இஸ்ரேல் பரபர விளக்கம்
பிரதே பரிசோதனை என்பது யாஹ்வா சின்வார் இறந்த பிறகு 24 மணி நேரம் 36 மணிநேரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் இஸ்ரேல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறந்தது யாஹ்வா சின்வார் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யாஹ்வா சின்வார் கைதியாக பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் முடிவுகள் லேப்பில் இருந்தன. அந்த முடிவுகளை ஒப்பிட்டு இறந்தது யாஹ்வா சின்வார் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது'' என கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications